சென்னையில் மட்டும் ரூ.44.11 கோடி பணம் சிக்கியது..!
பதற்றமான வாக்குச்சாவடிகளில் துணை ராணுவப் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் தெரிவித்தார்.
சென்னை காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் சற்று முன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, சென்னையில் தேர்தல் நடத்தை விதிகளை மீறிய புகாரில் இதுவரை 377 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. வாகன தணிக்கையின் போது ரூ.44.11 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
பதட்டமான வாக்குச்சாவடிகள் கண்டறியப்பட்டுள்ளன. பதற்றமான வாக்குச்சாவடிகளில் துணை ராணுவப் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார். 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது என ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் தெரிவித்தார்.