ஊரடங்கை மீறியதாக கடந்த 24 மணி நேரத்தில் 7533 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், மொத்தம் 3,41,971 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
கொரோனா பரவல் தீவிரம் காரணமாக நாடு முழுவதும் மே 17 ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி, தமிழகத்திலும் கொரோனா தாக்கம் அதிகரித்து வருவதால் மே 17 வரை பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் வெளியே வராத வண்ணம் போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அவசியமின்றி வெளியை சுற்றித்திரியும் நபர்கள் மீது பல்வேறு நடவடிக்கையும் எடுத்து வருகின்றனர். இந்த நிலையில் தமிழகத்தில் ஊரடங்கை மீறியதாக இதுவரை 4,07,895 பேர் கைது செய்யப்பட்டு, ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளதாக தமிழக காவல்துறை தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 10,009 பேர் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ளனர். பின்னர் ஊரடங்கை மீறியதாக கடந்த 24 மணி நேரத்தில் 7,533 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், மொத்தம் 3,41,971 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் இதுவரை வெளிய சுற்றியவர்கள் மீது 3,85436 வழக்குகள் போடப்பட்டு, ரூ4,01,92,619 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், வாகன உரிமையாளர்கள் தினசரி காலை 7 மணி முதல் பகல் 12.30 மணி வரை அந்தந்த எல்லைக்குட்பட்ட காவல் நிலையத்தில் ஆவணங்களை சரிபார்க்கப்பட்டு, பின்னர் வாகனங்கள் திரும்ப ஒப்படைக்கப்பட்டு வருகிறது. வாகனம் பெற வரும்போது எப்ஐஆர் நகல் மற்றும் ஓட்டுனர் உரிமம் அசல் மற்றும் நகல், வாகனத்தின் ஆர்.சி.புத்தகம் அசல் மற்றும் நகல் கொண்டு வர வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : சென்னையில் சிக்னல்கள் மற்றும் மேம்பாலங்களின் அருகே உள்ள 100க்கும் மேற்பட்ட பேருந்து நிறுத்தங்களை 100 மீட்டர் தள்ளி…
திருச்சி : 2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் , தங்கள் கட்சி கூட்டணி பற்றிய கேள்விகள் குறித்தும், திமுக, பாஜக…
சென்னை : தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை இயல்பைவிட 4% கூடுதலாகப் பெய்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தற்போது, குமரிக்கடல்…
சென்னை ;சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான[நவம்பர் 18] எபிசோடில் மீனா மீது கரிசனம் காட்டுகிறார் விஜயா.. போட்டோசூட்டினால் வந்த பிரச்சனை…
சென்னை : ஐபிஎல் 2025 தொடருக்கான மெகா ஏலம் என்பது வரும் நவ-24 மற்றும் 25ம் தேதிகளில் நடைபெற இருக்கிறது.…
டெல்லி : ஆம் ஆத்மி கட்சியில் இருந்து நேற்று விலகிய டெல்லி முன்னாள் அமைச்சர் கைலாஷ் கெலாட் பாஜகவில் தன்னை இணைத்து…