தூய்மைப் பணியாளர்களுக்கு வங்கிக்கடன் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் கேஎன் நேரு அறிவிப்பு.
சென்னையில் ரூ.400 கோடி மதிப்பீட்டில் பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்தப்படும் என்றும் அமைச்சர் கேஎன் நேரு அறிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவையில் துறைவாரியாக மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் பல்வேறு திட்டம் குறித்த அறிவிப்புகளை அமைச்சர் வெளியிட்டார். அப்போது பேசிய அவர், தூய்மை பணியாளர்கள் மேம்பாட்டுத் திட்டம் செயல்படுத்தப்படும். தூய்மைப் பணியாளர்களுக்கு வங்கிக்கடன் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
மெரினா கடற்கரையில் மாற்றுத்திறனாளிகளுக்கு நிரந்தர மர நடைபாதை அமைக்கப்பட உள்ள நிலையில், பெசன்ட் நகர் கடற்கரையில் கடலுக்கு அருகில் செல்வதற்கு ஏதுவாக ரூ.1 கோடி மதிப்பீட்டில் மர நடை பாதை அமைக்கப்படும். சென்னை வள்ளுவர் கோட்டம் சந்திப்பில் வாகன நெரிசலை குறைப்பதற்காக ரூ.98 கோடி மதிப்பீட்டில் புதிய மேம்பாலம் அமைக்கப்படும். ஆவடி மற்றும் காஞ்சிபுரம் நகராட்சிகளில் குடிநீர் திட்ட பணிகள் செயல்படுத்தப்படும். கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டம் உள்ளிட்ட சிறப்பான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
தமிழ்நாட்டில் பேரூராட்சிகளில் நபார்டு திட்டத்தின் கீழ் ரூ.200 கோடியில் சாலைகள் சீரமைக்கப்படும். கோடம்பாக்கம், அடையாறில் குடிநீர் விநியோக அமைப்பை மேம்படுத்தி ரூ.1958 கோடி மதிப்பில் திட்டம் செயல்படுத்தப்படும். மேலும், ஜீவன் நகரில் ரூ.400 கோடி மதிப்பீட்டிலும், கீழ்பாக்கம் தோட்டத்தில் ரூ.7 கோடி மதிப்பீட்டில் நடைபாதைகள் அமைக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
சிங்கப்பூர் :உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி ( FIDE) சிங்கப்பூரில் இன்று முதல் தொடங்குகிறது. சிங்கப்பூரின் ரிசார்ட்ஸ் வேர்ல்ட் சென்டோசாவில்…
மகாராஷ்டிரா : நடந்து முடிந்த மகாராஷ்டிரா சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான மகாயுதி கூட்டணி மிகப் பெரிய வெற்றி பெற்று…
டெல்லி : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது. இன்று தொடங்கி டிசம்பர் 20ம் தேதி வரை கூட்டத்தொடர் நடைபெறவுள்ளது.…
புது டெல்லி : மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு, பரபரப்பான அரசியல் சூழலுக்கு மத்தியில் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கி…
சென்னை : வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப்பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக தற்போது வலுவடைந்துள்ளது.மேலும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்…
ஜெட்டா : ஐபிஎல் 2025 தொடருக்கான மெகா ஏலத்தின் முதல் நாள் தற்போது நிறைவடைந்துள்ளது. பிற்பகல் 3.30 மணிக்கு தொடங்கிய…