புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக இடியுடன் கூடிய மழை பெய்து வருகிறது. இந்நிலையில் நேற்று வைத்தூர் சுற்றுவட்டரத்தில் உள்ள விவசாயிகள் 20 பேர் தண்ணீர்பந்தல் பட்டி பகுதியில் வேர்க்கடலை பிடுங்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அவர்கள் மழையில் நனையாமல் இருப்பதற்காக கூடாரம் ஒன்றும் அமைக்கப்பட்டிருந்தது. அந்த பகுதியில் திடீரென இடி விழுந்தது. இதில் சம்பவ இடத்திலேயே கலைச்செல்வி , லட்சுமி அம்மாள் , சாந்தி ஆகிய மூன்று பெண்கள் இறந்தனர்.
மேலும் 17 பேர் படுகாயமடைந்தனர். இவர்களை புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை கொடுத்து வந்த நிலையில் விஜயா என்பவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
தகவலறிந்த மருத்துவமனைக்கு விரைந்து வந்த புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் உமா மகேஸ்வரி படுகாயம் அடைந்தவர்களை சென்று பார்வையிட்டார். அப்போது உயிரிழந்த மற்றும் காயமடைந்தவர்களுக்கு நிவாரணம் வழங்கப்படும் என கூறினார்.
மேலும் பெரம்பலுர் அருகே இரண்டு பேர் இடி தாக்கி உயிர் இழந்து உள்ளனர்.இந்நிலையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நேற்று இடி தாக்கி உயிரிழந்த 6 பேரின் குடும்பத்தாருக்கு தலா 4 லட்சம் நிவாரணத் தொகையாக அறிவித்துள்ளார்.
புதுச்சேரி : வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், கடந்த 6 மணி நேரத்தில் மணிக்கு…
சென்னை : நேற்று பெண்களுக்கு எதிரான வன்முறைகள் ஒழிப்பு தினம் கடைபிடிக்கப்பட்டது. இதனை முன்னிட்டு முதலில் தவெக தலைவர் விஜய்…
சென்னை : ஹாலிவுட்டில் நம்ம ஊரு சிங்கம் என பெருமைப்படும் அளவுக்கு யோகி பாபு வளர்ச்சி கடல் அலைகளை போல…
சென்னை : வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், நாளை புயலாக உருவாகவுள்ளது. அதன்படி, புயல்…
சென்னை : வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை புயலாக மாறுகிறது. இந்த புயலுக்கு ஃபெங்கல்…
சென்னை :அம்மை நோய் வந்தால் வீட்டில் செய்ய வேண்டியதும் செய்யக்கூடாததையும் பற்றியும் இந்த செய்தி குறிப்பில் தெரிந்து கொள்வோம். அம்மை…