#TNBudget2021Live: விபத்தில் உயிரிழந்தால் ரூ.4 லட்சம் காப்பீட்டுத் தொகை – ஓ.பன்னீர்செல்வம் அறிவிப்பு
குடும்ப தலைவர் விபத்தில் மரணமடைந்தால் ரூ.4 லட்சம் காப்பீட்டுத் தொகை வழங்கப்படும் என்று ஓ.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார்.
சென்னை கலைவாணர் அரங்கில் கூடிய பேரவையில் இடைக்கால பட்ஜெட்டை துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். தமிழக சட்டப்பேரவையில் நிதியமைச்சர் ஓ பன்னீர்செல்வம் தனது 11-வது முறையாக பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.அவரது உரையில், தமிழ்நாட்டில் வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள 55.67 லட்சம் குடும்பங்களுக்கு குடும்பத் தலைவரின் இயற்கை மரணத்திற்கு ரூ.2 லட்சம் வழங்கப்படும் என்றும் குடும்ப தலைவர் விபத்தில் மரணமடைந்தால் ரூ.4 லட்சம் காப்பீட்டுத் தொகை வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார். நிரந்தர இயலாமைக்கு ரூ.2 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.