அறநிலையத்துறை ஆளுகையின் கீழ் உள்ள 8 கோவில்களில் ரூ 4.58 கோடி மதிப்பீட்டில் திருப்பணிகள் மேற்கொள்ளப்படும்-அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் அறிவிப்பு.

Default Image

பேரவையில் அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன்  அறிவிப்புகளை வெளியிட்டார்.அவர் வெளியிட்ட அறிவிப்பில்,  இந்து சமய அறநிலையத்துறை ஆளுகையின் கீழ் உள்ள 8 கோவில்களில் ரூ 4.58 கோடி மதிப்பீட்டில் திருப்பணிகள் மேற்கொள்ளப்படும்.

பக்தர்களின் அடிப்படை வசதிகளை மேம்படுத்தும் நோக்கில் 4 கோவில்களில் ரூ 96.93 லட்சம் மதிப்பீட்டில் குளியலறை மற்றும் கழிவறைகள் கட்டப்படும்.

மலை மேல் அமைந்துள்ள 2 திருக்கோவில்களுக்கு பக்தர்கள் எளிதாக சென்று வர ரூ 1.44 கோடி மதிப்பீட்டில் மலைப்பாதை சீரமைக்கப்படும்.

திருப்புகழ் அருணகிரி நாதர் புகழைப் போற்றும் வகையில் திருவண்ணாமலையில் மணிமண்டபம் மற்றும் விழுப்புரம் மாவட்டம் ராவுத்தர் நல்லூர் திருக்கோவிலின் முன் மண்டபம் ஆகியவை ரூ 1.37 கோடி மதிப்பீட்டில் கட்டப்படும் என்று தெரிவித்தார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்