தமிழக மாணவர்களுக்கு ரூ.360 கோடி நிதி ஒதுக்கீடு.. யாருக்கெல்லாம் ரூ.1000 கிடைக்காது.!

12 school students

சென்னை : தமிழ் புதல்வன் திட்டம் அடுத்த மாதம் தொடங்கப்பட உள்ள நிலையில், இந்த  திட்டத்தை செயல்படுத்த மாநில அளவிலான குழு, மாநில அளவிலான மேற்பார்வையாளர் குழு அமைத்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை 2024-2025 ஆம் நிதியாண்டு முதல் 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை அரசுப் பள்ளிகளில் பயின்று மற்றும் அரசு உதவி பெறும் பள்ளியில் தமிழ் வழியில் பயின்று உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கு “புதுமைப் பெண் திட்டம்” போன்று மாதந்தோறும் ரூ.1,000 உதவித் தொகை வழங்கும் “தமிழ்ப் புதல்வன் திட்டம்” செயல்படுத்தப்படுகிறது.

இதற்கான, பணிகளை தமிழக அரசு நேற்றைய தினம் தொடங்கியது. அதன்படி, ஆகஸ்ட் மாதம் முதல் இத்திட்டத்தின் கீழ், 6 முதல் 12ஆம் வகுப்பு வரை அரசு பள்ளியில் பயின்று கல்லூரியில் சேரும் மாணவர்களுக்கு, கல்லூரி முடிக்கும் வரை மாதம் ரூ.1000 வங்கிக் கணக்கில் செலுத்தப்பட உள்ளது.

இதன் மூலம் தோராயமாக சுமார் 3.28 லட்சம் மாணவர்கள் பயன்பெறுவர் என எதிர்பார்க்கப்படுகிறது. ஊக்கத்தொகை மாணவர்களின் வங்கி கணக்கிற்கு பரிமாற்றம் செய்த பின்னர், பதிவு செய்யப்பட்ட அலைபேசி எண்ணிற்கு குறுஞ்செய்தி அனுப்பப்படும்.

தற்பொழுது, இந்த திட்டத்தின்கீழ் மாணவர்கள் மாதம் ரூ.1000 பெறுவதற்கான தகுதி விதிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன. குறிப்பாக, இந்த திட்டத்தில் பயன்பெற ஆதார் எண் கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது. தகுதியான மாணவர்கள் ஆதார் எண் வைத்திருக்கும் வகையில் நடவடிக்கைகளை மேற்கொள்ள கல்வி நிறுவனங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

யாருக்கெல்லாம் கிடைக்கும் / கிடைக்காது:

  • அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் தமிழ் வழியில் பயின்ற மாணவர்களை தவிர்த்து, இதர மாணவர்களுக்கு இத்திட்டம் பொருந்தாது.
  • தொலைதூர வழியில், அங்கீகரிக்கப்படாத கல்வி நிறுவனங்களில் உயர்க்கல்வி பயிலும் மாணவர்களுக்கும், மற்ற மாநிலப்பள்ளிகளில் படித்தவர்களுக்கும் இத்திட்டத்தின் மூலம் ஊக்கத்தொகை பெற முடியாது.
  • வேறு ஏதேனும் உதவித் தொகை பெற்று வருபவராக இருப்பினும். இத்திட்டத்தில் பயன்பெற தகுதி உடையவராவர்.
  • மற்ற மாநில பள்ளிகளில் பயின்ற மாணவர்கள் இத்திட்டத்தில் பயனடைய தகுதி அற்றவர்களாவர்.
  • ஒரே குடும்பத்திலிருந்து எத்தனை மாணவர்கள் தகுதி பெற்றிருப்பினும், அனைவரும் இத்திட்டத்தின் கீழ் பயனடைய விண்ணப்பிக்கலாம்.
  • பள்ளிப் படிப்பிற்கு பின்னர். உயர்கல்வி பயின்று வரும் மாணவர்கள் மட்டுமே இத்திட்டத்தில் பயன்பெற தகுதியுடையவராவர்.
  • ஒருங்கிணைக்கப்பட்ட பாடப்பிரிவில் (Integrated courses) பயிலும் மாணவர்களுக்கு மட்டும் முதல் மூன்று ஆண்டுகள் இத்திட்டத்தின் கீழ் ஊக்கத் தொகையினை பெற இயலும்.
  • பருவத் தேர்வு, வருடத் தேர்வினை எழுத அனுமதிக்கப்படும் மாணவர்கள் இந்த உதவித் தொகை பெறுவதற்கு தகுதி பெறுவார்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்