15வது நிதிக்குழு பரிந்துரைப்படி தமிழகத்திற்கு ரூ.335 கோடி விடுவிப்பு.. மத்திய அரசு.!
கொரோனா வைரஸ் காரணமாக நிதி நெருக்கடி காரணமாக, மாநிலங்களின் வருவாய் குறைந்துள்ளது. இந்நிலையில், மாநிலங்களின் நெருக்கடியை சமாளிக்க மத்திய அரசு மானியமாக நிதி ஒதுக்கீடு அறிவித்துள்ளது.
அதன்படி, தமிழகம் உள்பட 14 மாநிலங்களுக்கு ரூ.6,196.08 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அதில், தமிழகத்திற்கு ரூ.355 கோடியை மத்திய அரசு விடுவித்துள்ளது. அதிகபட்சமாக கேரளாவிற்கு ரூ.1,276 கொடியும், ஹிமாச்சல பிரதேசத்திற்கு ரூ.952 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசிடம் இருந்து மாநிலத்திற்கு வழங்கப்படும் நிதி 1 % குறைக்கப்பட்டுள்ளது. கடந்த 2015-2020 காலகட்டத்தில் மாநிலங்களுக்கு 42% வரிப் பகிர்வு இருந்தது. ஆனால், தற்போது 41 % வரிப் பகிர்வு உள்ளது. மொத்த வரியில் அந்த 1 % புதிதாக பிரிக்கப்பட்ட ஜம்மு காஷ்மீர், லடாக் ஆகிய யூனியன் பிரதேசங்களுக்கு வழங்க இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.