உயிரற்ற பட்டேல் சிலைக்கு ரூ.3000 கோடி…!உயிர்வாழ துடிக்கும் புயலால் பாதித்த தமிழர்களுக்கு ரூ.350 கோடியா…!கனிமொழி ஆவேசம்

Published by
Venu

மத்திய அரசின் கஜா புயல் நிவாரண நிதி தொடர்பாக  திமுகவின் மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி கருத்து தெரிவித்துள்ளார்.
தமிழகத்தை குறிப்பாக நாகப்பட்டினம் , தஞ்சாவூர்,புதுக்கோட்டை ,திருவாரூரை காலி செய்த கஜா புயலின் தாக்கத்திலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக மக்கள் மீண்டு வருகின்றனர்.
Image result for gaja death
 
புயலின் பாதிப்பில் சரியாக மீட்புப்பணி , நிவாரணம் வராத நிலையில் மக்கள் இன்று போராட்டம் நடத்தினர்.அதுமட்டுமில்லாமல் நாகை , திருவாரூர் மற்றும் தஞ்சை ஆகிய மாவட்டங்களில் நிவாரண பணிகளையும் , நிவாரண உதவிகளையும் பல்வேறு சமூக ஆர்வலர்கள் செய்து வருகின்றனர்.

பின்  பிரதமரின் இல்லத்தில் நடைபெற்ற சந்திப்பில் கஜா புயல் பாதிப்புக்கு நிவாரணம் கோரினார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி.அதன் பின்னர் அவர் கூறுகையில், கஜா புயல் நிவாரண நிதியாக ரூ.15 ஆயிரம் கோடி தமிழகத்துக்கு வழங்க பிரதமரிடம் கோரினேன். புயல் சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள உடனடியாக ரூ.1,500 கோடி கோரப்பட்டது என்று தெரிவித்தார்.
இந்நிலையில் மத்திய அரசு முதல் கட்ட நிவாரண நிதியாக ரூ.200 கோடி நிதி ஒதுக்கியது.  இந்த நிலையில், இரண்டாம் கட்ட நிவாரண  நிதியாக ரூ.353.70 கோடி ஒதுக்கியது மத்திய உள்துறை அமைச்சகம் . மாநில பேரிடர் நிதியிலிருந்து ஒதுக்கி உத்தரவு பிறப்பித்தது மத்திய உள்துறை அமைச்சகம்.

இந்நிலையில் திமுகவின் மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார்.அதில்  உயிரற்ற பட்டேல் சிலைக்கு 3000 கோடியாம், உயிர்வாழ துடிக்கும் கஜா புயல் பாதிக்கப்பட்ட 12 மாவட்ட  தமிழர்களுக்கு 350 கோடியாம் என்று பதிவிட்டுள்ளார்.

Recent Posts

அம்மை நோய் வந்தால் பராமரிக்கும் முறை ..!என்ன செய்யக்கூடாது.?

சென்னை :அம்மை நோய் வந்தால் வீட்டில் செய்ய வேண்டியதும் செய்யக்கூடாததையும்  பற்றியும் இந்த செய்தி குறிப்பில் தெரிந்து கொள்வோம். அம்மை…

31 minutes ago

28-ஆம் தேதி வரை இந்த மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு! “ஆரஞ்சு அலர்ட்” கொடுத்த வானிலை மையம்!

சென்னை : வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை புயலாக மாறும் எனவும், இந்த…

33 minutes ago

ருத்துராஜ் போட்ட பக்கா பிளான்? களமிறங்கப் போகும் சிஎஸ்கே சிங்கப்படை இதுதான்!!

சென்னை : அடுத்த ஆண்டு மார்ச் மாதம் ஐபிஎல் 2025 தொடரானது தொடங்கவுள்ளது. இந்த தொடர் மார்ச்-14 ம் தேதி…

37 minutes ago

ரெட் அலர்ட்: மயிலாடுதுறை, நாகை, திருவாரூர் மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கும்.!

சென்னை : வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், நாளை புயலாக உருமாறும் என வானிலை…

42 minutes ago

நாளை உருவாகிறது ‘புயல்’… புயலுக்கு பெயர் ஃபெங்கல்.! எங்கு கரையை கடக்கும்?

சென்னை :  வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை புயலாக மாறும் என்று இந்திய…

1 hour ago

கனமழை எச்சரிக்கை எதிரொலி : ஆவின் பாலகம் 24 மணிநேரமும் செயல்படும்!

சென்னை : வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதியானது வலுவடைந்து உள்ளதால், நாளை புயலாக மாற வாய்ப்புள்ளது என இந்திய…

1 hour ago