ரூ.300 கோடி மதிப்பிலான நமக்கு நாமே திட்டம்;100 கோடி மதிப்பிலான வேலைவாய்ப்பு திட்டம் – தொடங்கி வைத்த முதல்வர் ஸ்டாலின்!

Published by
Edison

சேலம்:ரூ.300 கோடி மதிப்பிலான நமக்கு நாமே திட்டம் மற்றும் 100 கோடி மதிப்பிலான நகர்ப்புற வேலைவாய்ப்பு திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்துள்ளார்.

இன்று சேலம் மாவட்டம் சென்றுள்ள முதல்வர் ஸ்டாலின் அவர்கள் அரசு விழாவில் பங்கேற்றுள்ளார். தற்போது,சீலநாயக்கன்பட்டி நடைபெறும் அரசு விழாவில்,ரூ.300 கோடி மதிப்பிலான நமக்கு நாமே திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்துள்ளார்.இதனையடுத்து,31 ஆயிரம் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார்.

மேலும்,வேலை இல்லா திண்டாட்டத்தை போக்கும் நோக்கில் 100 கோடி மதிப்பிலான நகர்ப்புற வேலைவாய்ப்பு திட்டத்தையும் முதல்வர் தொடங்கி வைக்கிறார்.மேலும்,ரூ.60 கோடி மதிப்பிலான புதிய திட்டங்களையும் முதல்வர் தொடங்கி வைக்கிறார்.

இவ்விழாவில்,முதல்வரோடு நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் கே.என்.நேரு,கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி,உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி,பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, வேளாண்மை – உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் மற்றும் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து,திமுக நிகழ்ச்சியிலும் முதல்வர் கலந்து கொண்டு மறைந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வீரபாண்டி ராஜா என்பவரது உருவப்படத்தையும் திறந்து வைக்கிறார்.

Recent Posts

ரொம்ப பிடிச்ச மைதானம்..அதான் காந்தாராவாக மாறிட்டேன்! கே.எல்.ராகுல் ஸ்பீச்!

ரொம்ப பிடிச்ச மைதானம்..அதான் காந்தாராவாக மாறிட்டேன்! கே.எல்.ராகுல் ஸ்பீச்!

பெங்களூர் : நேற்றைய ஐபிஎல் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் , டெல்லி கேபிட்டல்ஸ் அணியும் விளையாடின. இதில் முதலில்…

34 minutes ago

தமிழ்நாடு பாஜகவின் 13வது தலைவராகிறார் நயினார் நாகேந்திரன்!

சென்னை :  தமிழ்நாடு பாஜகவின் 13வது மாநிலத் தலைவராக நயினார் நாகேந்திரன் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்தத் தேர்தல் செயல்முறையில்…

2 hours ago

பாஜக கூட்டத்தில் அடுத்தடுத்த டிவிஸ்ட்., பேனர் மாற்றம்! நயினார் நாகேந்திரன் புகைப்படம்!

சென்னை : அடுத்தடுத்த பரபரப்பான நிகழ்வுகளுடன் பாஜக அரசியல் களம் நகர்ந்து வருகிறது. மத்திய அமைச்சரும் , பாஜக தேசிய…

2 hours ago

”டாக்சிக் மக்களே… இது தான் பெயரில்லா கோழைத்தனம்” – த்ரிஷாவின் காட்டமான பதிவு.!

சென்னை : அஜித்தின் 'குட் பேட் அக்லி' திரைப்படம் வெளியானதைத் தொடர்ந்து, படத்தில் கதாநாயகியாக நடிக்கும் நடிகை த்ரிஷா, இப்படம்…

3 hours ago

பொன்முடியின் அமைச்சர் பதவி பறிக்கப்படுமா? மு.க.ஸ்டாலின் தலைமையில் முக்கிய ஆலோசனை!

சென்னை :  திமுக அமைச்சர் பொன்முடி அண்மையில் ஒரு நிகழ்வில் பேசுகையில், இரு சமயத்தாரை குறிப்பிட்டு உடலுறவு குறித்து மறைமுகமாக…

3 hours ago

“நான் மிகப்பெரிய தவறு செய்துவிட்டேன்.,” அமைச்சர் துரைமுருகன் பகிரங்க வருத்தம்!

சென்னை : திமுக பொதுச்செயலாளரும், அமைச்சருமான துரைமுருகன் அண்மையில் தனது தொகுதியான காட்பாடியில் நடைபெற்ற கட்சி நிகழ்வில் பேசுகையில், மாற்றுத்திறனாளிகள்…

5 hours ago