மஞ்சுவிரட்டில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.3 லட்சம் நிதியுதவி – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!

நேற்று (ஜனவரி 17) சிவகங்கை மாவட்டம் சிராவயல் என்கிற கிராமத்தில் ஜல்லிக்கட்டு போன்ற மஞ்சுவிரட்டு போட்டி தொடங்கி நடைபெற்றது. இந்த போட்டியின் போது, அங்கு பார்வையாளராக வந்திருந்த வலையப்பட்டியை சேர்ந்த 13 வயது சிறுவன் பாஸ்கர் காலை முட்டியதில் சம்பவ இடத்திலே பரிதாபமாக உயிரிழந்தார்.
அங்கு நடைபெற்ற மஞ்சுவிரட்டு போட்டியை கான பலரும் வருகை தந்தனர். அப்போது மஞ்சுவிரட்டு காளை அவிழ்த்துவிடப்பட்டு அது குறிப்பிட்ட தூரத்தை கடந்து, மாட்டின் உரிமையாளர்கள் அதனை பிடிக்க முற்படும் போது காளை மோதியதில் பார்வையாளராக வந்திருந்த சிறுவன் பாஸ்கர் உயிரிழந்தார்.
மாடுபிடி வீரர்களுக்கு ரூ.1,000 உதவித் தொகை வழங்க வேண்டும்! எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்!
அதைப்போலவே, முத்துமணி என்பவரும் மாடு முட்டி உயிரிழந்தார். இந்த நிலையில் இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கலை தெரிவித்ததோடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிவாரணமும் அறிவித்துள்ளார். இது குறித்து வெளியீடப்பட்டுள்ள அறிக்கையில் ” சிவகங்கை மாவட்டம் சிராவயல் கிராமத்தில் நடந்த மஞ்சு விரட்டு போட்டியில் முத்துமணி, பாஸ்கரன் ஆகிய இருவரும் எதிர்பாராதவிதமாக படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்கள் என்ற துயரமானச் செய்தியை கேட்டு மிகவும் வேதனையடைந்தேன்.
இவர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், அவர்களது நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு. உயிரிழந்த இருவரின் குடும்பத்தினருக்கும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து தலா 3 லட்சம் ரூபாய் வழங்கவும் உத்தரவிட்டுள்ளேன்” என அறிக்கையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
விஜய் தம்பி ஜி இப்படி பேசாதீங்க! தமிழிசை சௌந்தரராஜன் பதிலடி!
March 31, 2025