உயிரிழந்த 50 காவலர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.3 லட்சம் நிதியுதவி – முதல்வர் பழனிசாமி
தமிழகத்தில் உயிரிழந்த 50 காவலர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.3 லட்சம் நிதியுதவி வழங்க முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி தனது ட்விட்டர் பக்கத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் உடல்நலக் குறைவு மற்றும் விபத்துகளில் உயிரிழந்த 50 காவலர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவிப்பதாகவும், இச்சம்பவங்களில் உயிரிழந்த காவலர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.3 லட்சம் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க உத்தரவிட்டுள்ளேன் என்று பதிவிட்டுள்ளார்.
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் உடல்நலக் குறைவு (ம) விபத்துகளில் உயிரிழந்த 50 காவலர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து, இச்சம்பவங்களில் உயிரிழந்த காவலர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.3 லட்சம் முதலமைச்சரின் பொதுநிவாரண நிதியிலிருந்து வழங்க உத்தரவிட்டுள்ளேன். pic.twitter.com/9rgxn4jnNk
— Edappadi K Palaniswami (@CMOTamilNadu) February 6, 2021