ரூ.3 லட்சம் கோடி முதலீடு உறுதியானது மகிழ்ச்சி- துணை குடியரசு தலைவர் வெங்கையா நாயுடு
ரூ.3 லட்சம் கோடி முதலீடு உறுதியானது மகிழ்ச்சி என்று துணை குடியரசு தலைவர் வெங்கையா நாயுடு தெரிவித்துள்ளார்.
உலக முதலீட்டாளர் மாநாட்டின் நிறைவு நிகழ்ச்சியில் துணை குடியரசு தலைவர் வெங்கையா நாயுடு பேசுகையில், தமிழும் தமிழ்நாடும் மனதுக்கு நெருக்கமானவை என எப்போதும் சொல்வேன். நாட்டில் மிக அழகான மாநிலம் தமிழ்நாடு. இந்தியாவில் செய்யப்படும் முதலீடுகள் சிறந்த பலனளிக்கும் என உலகிற்கு உறுதி கூறுகிறேன். ரூ.3 லட்சம் கோடி முதலீடு உறுதியானது மகிழ்ச்சி.
தமிழகம் வாகனம், தொலைத்தொடர்பு உள்ளிட்ட துறைகளில் முன்னணி வகிக்கிறது. மத்திய மாநில அரசுகள் இடையே ஒத்துழைப்பும் ஒருங்கிணைப்புமே வளர்ச்சி தரும்.மோசடி செய்துவிட்டு வெளிநாடு தப்புபவர்கள் சட்டத்தின் பிடியில் இருந்து தப்ப முடியாது. கருப்பு பணத்தை மீட்க வெளிநாடுகளுடன் தகவல் பரிமாற்ற ஒப்பந்தங்கள் ஏற்பட்டுள்ளது என்றும் துணை குடியரசு தலைவர் வெங்கையா நாயுடு தெரிவித்துள்ளார்.