‘ரூ 27,205,88,00,000 ஒதுக்கீடு’ “683 உதவி பேராசிரியர்கள் நியமனம்” உயர்கல்வித்துறை அமைச்சர்..!!
41 பல்கலைக்கழகு உறுப்பு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 264 புதிய பாடப்பிரிவுகள் விரைவில் தொடங்கப்படும் என்று உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் தெரிவித்துள்ளார்.
தருமபுரி ; தருமபுரி அரசு மருத்துவ கல்லூரி கூட்டரங்கில் மாவட்ட ஆட்சித்தலைவர் எஸ். மலர்விழி தலைமையில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பேசிய உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன்.அனைவருக்கும் சமமான கல்வி அனைவருக்கும் உயர் கல்வி வழங்க வேண்டும் என்ற நோக்கில் அரசு செயல்பட்டு வருகிறது. பள்ளிக்கல்வித்துறையில் 16 வகையான பொருட்களை இலவசமாக மாணவர்களுக்கு வழங்கி வருகிறது. மேலும் இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இல்லாத அளவில் கடந்த நிதிநிலை அறிக்கையில் தமிழகத்தில் பள்ளி கல்வித்துறைக்கு 27 ஆயிரத்து 205 கோடியே 88 லட்சம் ரூபாய் நிதியை ஒதுக்கீடு செய்துள்ளது.
முதலமைச்சர் சட்டசபையில் 110 விதியின் கீழ் தமிழகத்தில் உள்ள 41 பல்கலைக்கழக உறுப்பு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் அனைத்தும் நடப்பு கல்வி ஆண்டு முதல் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளாக மாற்றப்படும் என அறிவித்துள்ளார். மேலும் இந்த ஆண்டிற்குள் ரூ.152.20 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும் நடப்பு கல்வி ஆண்டு முதல் 68 இளங்கலை, 60 முதுகலை, 136 ஆய்வு பாடப்பிரிவுகள் என மொத்தம் 264 புதிய பாடப்பிரிவுகள் துவங்கப்படும். 683 உதவி பேராசிரியர்கள் புதிய பணியிடங்கள் உருவாக்கப்படும். இதனால் அரசிற்கு ரூ.68.46 கோடி செலவாகும். அதுமட்டுமில்லாமல் இப்பாடப்பிரிவிற்கு தேவைக்காக ரூ.62.75 கோடியில் 324 வகுப்பறை கட்டடங்கள், 50 ஆய்வகங்கள் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகள் அமைத்து தரப்படும் என அறிவித்துள்ளார்.
பென்னாகரம், அரூர், பாப்பிரெட்டிப்பட்டி ஆகிய இடங்களில் பல்கலைகழக உறுப்புக் கல்லூரிகள் கலைக்கல்லூரியாக மாற்றம் செய்யப்படுவதால் இங்கு பயிலும் மாணவர்கள் நடப்பு கல்வி ஆண்டு முதல் குறைந்த கல்வி கட்டணத்தில் கல்வி பயில வழிவகை செய்யப்பட்டுள்ளது இவ்வாறு அமைச்சர் கே.பி.அன்பழகன் பேசினார்.
DINASUVADU