நடப்பாண்டில் ரூ.2,564 கோடி பயிர்க்கடன் வழங்கப்படும் – அமைச்சர் செல்லூர் ராஜு
நடப்பு குறுவை சாகுபடிக்கு தேவையான 29 ஆயிரத்து 889 மெட்ரிக் டன் யூரியா, டிஏபி, எம்ஓபி, காம்ப்ளக்ஸ் போன்ற உரங்கள் இருப்பில் உள்ளன.
காவிரி டெல்டா பகுதிகளில் குறுவை நெல் சாகுபடிக்காக மேட்டூர் அணையிலிருந்து பாசனத்திற்காக நீர் திறப்பை முன்னிட்டு டெல்டா மாவட்டங்களில் பயிர் கடன் இடுபொருள்கள், உர விநியோகம் தொடர்பாக மண்டல இணைப்பதிவாளர் மற்றும் மத்திய கூட்டுறவு வங்கிகளின் மேலாண்மை இயக்குனர்களுடன் ஆய்வு கூட்டம் இன்று திருச்சியில் நடைபெற்றது. இதில் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ பங்கேற்றார்.
அப்போது, பேசிய அமைச்சர், நடப்பு குறுவை சாகுபடிக்கு தேவையான 29 ஆயிரத்து 889 மெட்ரிக் டன் யூரியா, டிஏபி, எம்ஓபி, காம்ப்ளக்ஸ் போன்ற உரங்கள் இருப்பில் உள்ளன என்று தெரிவித்துள்ளார். டெல்டா மாவட்டங்களில் கூட்டுறவு சங்கங்களின் மூலம் நடப்பாண்டில் ரூ.2,564 கோடி பயிர்க்கடன் வழங்கப்படும். மே 22 ம் தேதி வரை ரூ.43.88 கோடி பயிர்க்கடன் வழங்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார்.