ரூ. 25 000 லஞ்சம்..!கைது செய்யப்பட்ட மோட்டார் வாகன ஆய்வாளர் வங்கி லாக்கரில் இருந்து 10 கிலோ தங்க நகைகள் பறிமுதல்..!
மோட்டார் வாகன ஆய்வாளர் பாபுவின் வங்கி லாக்கரில் இருந்து மேலும் 10 கிலோ தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
விழுப்புரம் அருகே கள்ளக்குறிச்சியில் ரூ. 25 000 லஞ்சம் வாங்கிய மோட்டார் வாகன ஆய்வாளர் பாபு கைது செய்யப்பட்டனர்.அதேபோல் மோட்டர் வாகன ஆய்வாளரின் உதவியாளர் செந்தில்குமாரையும் லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸ் கைது செய்தனர். வாகனத் தகுதிச் சான்று பெற முத்துகுமாரிடம் ரூ. 25000 லஞ்சம் பெற்றபோது மோட்டார் வாகன ஆய்வாளர் பாபு மற்றும் ஆய்வாளரின் உதவியாளர் செந்தில்குமர் சிக்கினார்கள்.மேலும் மோட்டார் வாகன ஆய்வாளர் பாபுவின் வீட்டில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் விழுப்புரம் லஞ்ச ஒழிப்பு நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டது.
இந்நிலையில் லஞ்சப் புகாரில் கைதான மோட்டார் வாகன ஆய்வாளர் பாபுவின் வங்கி லாக்கரில் இருந்து மேலும் 10 கிலோ தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
ஏற்கனவே மோட்டார் வாகன ஆய்வாளர் பாபுவின் வங்கி லாக்கர்களில் இருந்து 2,000 சவரன் நகைகள் பறிமுதல் செய்யப்பட்டிருந்த நிலையில் மேலும் 10 கிலோ தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.