இன்று முதல் தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும் தமிழக அரசு வழங்கும் பொங்கல் பரிசுப்பணம் ரூ.2500 வழங்கப்படுகிறது.
ஒவ்வொரு அரிசி ரேஷன் அட்டை வைத்துள்ளவர்களுக்கு பொங்கல் பரிசாக ரூ.2500 வழங்கப்படும் என்று முதல்வர் பழனிசாமி அறிவித்தார். இதனுடன் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும் என்றும் அதில், ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, முழு கரும்பு, திராட்சை, வெல்லம், முந்திரி, ஏலக்காய் உள்ளிட்ட பொருட்களும் இடம்பெறும் என்று அறிவித்தார்.
ஜனவரி 4-ஆம் தேதி முதல் பொங்கல் பரிசு தொகுப்பு விநியோகம் செய்யப்படும் என்றும் 2.06 கோடி ரேஷன் அட்டை வைத்துள்ளவர்களுக்கு பொங்கல் பரிசு வழங்கப்படும் எனவும் குறிப்பிட்டிருந்தார்.இதற்காக தமிழக அரசு ரூ.5,604 கோடி நிதி ஒதுக்கி அரசாணை வெளியிட்டது.அதாவது முற்பகல் 100 பேர், பிற்பகலில் 100 பேருக்கு வழங்கும் வகையில் டோக்கன் வழங்க வேண்டும் என்று அரசு தரப்பில் அறிவுறுத்தப்பட்டது.அதன்படி டோக்கனும் வழங்கப்பட்டது.
இன்று முதல் தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும் தமிழக அரசு வழங்கும் பொங்கல் பரிசுப்பணம் ரூ.2500 மற்றும் பொங்கல் பரிசு தொகுப்புகள் வழங்கப்படுகிறது. இன்றைய தேதிக்குரிய டோக்கன் பெற்றவர்களுக்கு மட்டுமே இன்று பொருட்கள் வழங்கப்படும்.மீதமுள்ளவர்களுக்கு எந்தெந்த தேதியில் குறிப்பிடப்பட்டுள்ளதோ அந்த தேதியில் தான் பொருட்கள் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.கடைசி நாளான 13-ஆம் தேதி அன்று டோக்கனில் குறிப்பட்ட நாள் படி பொருட்கள் வாங்க முடியாதவர்கள் சென்று வாங்கி கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.கார்டு வைத்துள்ளவர்கள் விரல் ரேகை கட்டாயமில்லை என்றும் கார்டு மற்றும் டோக்கன் கொண்டுவந்தால் போதுமானது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை : தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை இயல்பைவிட 4% கூடுதலாகப் பெய்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தற்போது, குமரிக்கடல்…
சென்னை ;சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான[நவம்பர் 18] எபிசோடில் மீனா மீது கரிசனம் காட்டுகிறார் விஜயா.. போட்டோசூட்டினால் வந்த பிரச்சனை…
சென்னை : ஐபிஎல் 2025 தொடருக்கான மெகா ஏலம் என்பது வரும் நவ-24 மற்றும் 25ம் தேதிகளில் நடைபெற இருக்கிறது.…
டெல்லி : ஆம் ஆத்மி கட்சியில் இருந்து நேற்று விலகிய டெல்லி முன்னாள் அமைச்சர் கைலாஷ் கெலாட் பாஜகவில் தன்னை இணைத்து…
திருச்சி : நேற்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி காவிரி சரபங்கா உபரிநீர்த் திட்டத்தை அமல்படுத்தியதற்கு விவசாயச் சங்கங்கள் சார்பில்…
சென்னை : 2026 சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவுடன் தவெக கூட்டணி என பரவி வந்த செய்தியை அக்கட்சியின் பொதுச் செயலாளர்…