தொழில்நகரமான திருப்பூரில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைக்க ரூ.250 கோடியா? என தற்போது சமூக வலைதளங்களில் எழுந்த விமர்சனத்தை தொடர்ந்து, திருப்பூர் மாநகராட்சி நிர்வாகம் தற்போது விளக்கம் அளித்துள்ளது.
திருப்பூர் கூத்தம்பாளையம் பகுதியில், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மூலம் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டப்பட்டுள்ளது. இந்த தொட்டி அமைக்க திட்ட மதிப்பீடு ரூ.250 கோடி என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. மேல்நிலை நீர்த்தேக்க தண்ணீர் தொட்டி அமைக்க இவ்வளவு தொகையா? என்று தற்போது சமூக வலைதளங்களில் விமர்சனம் எழுந்தது.
இந்நிலையில் இந்த சர்ச்சைக்கு அளிக்கப்பட்ட விளக்கத்தில், திருப்பூர் மாநகராட்சியில் வரும் 2050 ஆண்டில் எதிர்பார்க்கப்படும் மக்கள் தொகை 19 லட்சத்து 50 ஆயிரம் பேர் ஆகும். இந்த மக்கள் தொகைக்கு ஏற்ப குடிநீர் தேவையை ஈடு செய்ய 4-வது குடிநீர் திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் முதல்கட்டமாக ரூ.250 கோடி மதிப்பில் 2015-16-ம் ஆண்டு அம்ரூத் திட்டத்தில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மூலம் உள்கட்டமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. மேட்டுப்பாளையம், பவானி ஆற்றிலிருந்து குழாய் பதித்து, அன்னூர் அருகே, சுத்திகரிப்பு செய்து, ராட்சத குழாய் மூலம், திருப்பூர் நகருக்கு குடிநீர் கொண்டு வரப்படுகிறது. இத்திட்டத்தில் மாநகராட்சி பகுதியில், 27 இடங்களில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைத்து, பகுதி வாரியாக குடிநீர் சப்ளை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. தொட்டியில், 4ம் குடிநீர் திட்டத்தின் மொத்த மதிப்பு தொகைதான் குறிப்பிடப்பட்டுள்ளது. இதில் எந்தவிதமான தவறும் நடைபெறவில்லை என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.
டெல்லி : பஹல்காமில் நமது மகள்களின் நெற்றிக் குங்குமத்தை அழித்தவர்களுக்கு, அவர்களின் சொந்த சகோதரியைக் கொண்டே பாடம் கற்பித்துள்ளோம் என…
சென்னை : மத்திய கிழக்கு அரபிக் கடலில் வரும் 22ஆம் தேதி காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்பு உள்ளது.…
தூத்துக்குடி மாவட்டத்தில், காருக்குள் கருகிய நிலையில் ஒரு சடலம் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு…
சென்னை : மத்தியமேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒருவளி மண்டல மேலடுக்கு சுழற்சி…
சென்னை : நடிகர் விஷால் எதாவது நிகழ்ச்சிக்கு சென்றாலே அவரிடம் அடுத்த என படம் நடிக்கிறீர்கள் என்று கேட்பதை விட உங்களுக்கு…
சென்னை : தமிழகத்தில் 2026 சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வருவதால், அரசியல் களம் இப்போதே சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. தேர்தல் நடைபெறுவதை…