சாலிகிராமம் காந்திநகரில் தனியார் வாகனங்கள், கட்டுமான கழிவால் ஆக்கிரமிக்கப்பட்டிருந்த வடபழனி கோவிலுக்கு சொந்தமான 250 கோடி மதிப்புள்ள 5.5 ஏக்கர் நிலம் மீட்கப்பட்டது. கோவில் நிலம் ஆக்கிரமிக்கப்பட்டு இருந்த இடங்களில் அறநிலை துறை அமைச்சர் சேகர்பாபு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். பின்னர், செய்தியாளர்களை சந்தித்த இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு, தமிழக அரசு 30 நாள் நிறைவு செய்துள்ளது டிரைலர் தான்; இனி தான் மெயின் பிக்சர் பார்ப்பீர்கள்.
யார் தவறு செய்தாலும் சட்டம் தன் கடமையை செய்யும். தடைப்பட்டிருந்த இந்த இடமானது முழுக்க சமுதாயம் சார்ந்து ஏழை எளியவர்கள் பயன்படுகின்ற வகையில் சமுதாய நோக்கத்தோடு இந்த இடத்தை பயன்படுத்த வேண்டும் என முதலமைச்சர் அவர்கள் உத்தரவிட்டிருக்கிறார். அனைவரும் கலந்து ஆலோசித்து இந்த இடத்தில் ஏழை மக்கள், அடித்தட்டு மக்கள் வறுமைக் கோட்டிற்கு கீழே இருப்பவர்கள் பொருளாதாரத்தில் நலிவுற்றவர்கள் மேம்படுவதற்கான திட்டம் நிச்சயமாக இந்த இடத்தில் செயல்படுத்த முதலமைச்சர் அதற்கான அறிவிப்பை விரைவில் வெளியிடுவார் என தெரிவித்தார்.
அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகும் சட்டத்தை 100 நாட்களில் செயல்படுத்துவோம். இந்து சமய அறநிலைத்துறை சொத்துக்களை யார் ஆக்கிரமித்து இருந்தாலும் மீட்போம். தமிழ்நாட்டில் பாஜக தன்னை நிலைநிறுத்திக் கொள்ள பல்வேறு விமர்சனங்களை செய்து வருகிறது என தெரிவித்தார்.
சென்னை : இன்று (நவம்பர் 22) சென்னை அண்ணா அறிவாலயத்தில் தமிழக முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக…
டெல்லி : உலகளவில் பெரும்பாலான ஸ்மார்ட் போன் பயன்பாட்டாளர்களின் இணையவழி தேடல் எஞ்சினாக செயல்பட்டு வருகிறது கூகுள் குரோம். இந்த…
சேலம் : பள்ளி மாணவர்களை பள்ளிகளில் வேலை வாங்கும் நிகழ்வுக்கு அவ்வபோது உயர் கல்வி அதிகாரிகள் நடவடிக்கைகள் எடுத்து வந்தாலும்,…
சென்னை : கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலை பகுதியில் தமிழக வெற்றிக் கழகம்…
சென்னை : தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் இன்று ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.…
ஆஸ்திரேலியா : அதானி குழுமத்திற்கு இந்த வாரம் அடிமேல் அடியாக விழுந்து கொண்டிருக்கிறது. ஏற்கனவே அமெரிக்க வழக்கறிஞர்கள் அளித்த லஞ்ச…