#BREAKING: சென்னை வடபழனி கோயிலின் ரூ.250 கோடி சொத்து மீட்பு ..!

Default Image
  • சென்னையில் வடபழனி கோவிலுக்கு சொந்தமான 250 கோடி மதிப்புள்ள சொத்துக்களை தமிழக அரசு மீட்டது.
  • சாலிகிராமம் காந்திநகரில் தனியார் வாகனங்கள், கட்டுமான கழிவால் ஆக்கிரமிக்கப்பட்டிருந்த 5.5 ஏக்கர் நிலம் மீட்கப்பட்டது.

சாலிகிராமம் காந்திநகரில் தனியார் வாகனங்கள், கட்டுமான கழிவால் ஆக்கிரமிக்கப்பட்டிருந்த வடபழனி கோவிலுக்கு சொந்தமான 250 கோடி மதிப்புள்ள 5.5 ஏக்கர் நிலம் மீட்கப்பட்டது. கோவில் நிலம் ஆக்கிரமிக்கப்பட்டு இருந்த இடங்களில் அறநிலை துறை அமைச்சர் சேகர்பாபு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். பின்னர், செய்தியாளர்களை சந்தித்த இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு, தமிழக அரசு 30 நாள் நிறைவு செய்துள்ளது டிரைலர் தான்; இனி தான் மெயின் பிக்சர் பார்ப்பீர்கள்.

யார் தவறு செய்தாலும் சட்டம் தன் கடமையை செய்யும். தடைப்பட்டிருந்த இந்த இடமானது முழுக்க சமுதாயம் சார்ந்து ஏழை எளியவர்கள் பயன்படுகின்ற வகையில் சமுதாய நோக்கத்தோடு இந்த இடத்தை பயன்படுத்த வேண்டும் என முதலமைச்சர் அவர்கள் உத்தரவிட்டிருக்கிறார். அனைவரும் கலந்து ஆலோசித்து இந்த இடத்தில்  ஏழை மக்கள், அடித்தட்டு மக்கள் வறுமைக் கோட்டிற்கு கீழே இருப்பவர்கள் பொருளாதாரத்தில் நலிவுற்றவர்கள் மேம்படுவதற்கான திட்டம் நிச்சயமாக இந்த இடத்தில் செயல்படுத்த முதலமைச்சர் அதற்கான அறிவிப்பை விரைவில் வெளியிடுவார் என தெரிவித்தார்.

அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகும் சட்டத்தை 100 நாட்களில் செயல்படுத்துவோம். இந்து சமய அறநிலைத்துறை சொத்துக்களை யார் ஆக்கிரமித்து இருந்தாலும் மீட்போம். தமிழ்நாட்டில் பாஜக தன்னை நிலைநிறுத்திக் கொள்ள பல்வேறு விமர்சனங்களை செய்து வருகிறது என தெரிவித்தார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்