#BREAKING: தந்தை மகன் உயிரிழப்பு -திமுக சார்பில் ரூ.25 லட்சம் நிதியுதவி
சாத்தான்குளத்தில் போலீஸ் காவலில் உயிரிழந்த தந்தை, மகன் குடும்பத்திற்கு திமுக சார்பில் ரூ.25 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் சேர்ந்த பென்னிக்ஸ் மற்றும் அவரது தந்தை ஜெயராஜ் ஆகியோர் கோவில்பட்டி கிளைச் சிறையில் உயிரிழந்தனர். சிறையில் தந்தை மகன் உயிரிழந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில் உயிரிழந்த தந்தை, மகன் குடும்பத்திற்கு திமுக சார்பில் ரூ.25 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.இது தொடர்பாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் ,சாத்தான்குளத்தில் ஜெயராஜ் – பென்னிக்ஸ் இருவரையும் காவல்த்துறையினர் தாக்கி,லத்தியை பின்புறம் திணித்து,முடிகளை பிய்த்தெறிந்து உயிர் பறித்ததைக் கண்டு தமிழகமே பதறுகிறது.
காவல்த்துறையினர் சட்டத்தை கையில் எடுத்துக்கொண்டு பழனிசாமி தலைமையிலான அரசு அனுமதித்ததன் விளைவுதான் இந்த பெருங்கோடூரம்.கொடுரச் செயலுக்குத் துணை நின்றவர்களுக்கு கடுமையான தண்டனை கிடைக்கும் வகையில் சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு திமுக துணை நிற்கும். உயிர்களை பறிகொடுத்து,3 பெண் பிள்ளைகளுடன் வேதனையில் வெந்துகொண்டிருக்கும் அம்மையார் செல்வராணி குடும்பத்திற்கு 25 லட்ச ரூபாய் நிதியுதவி அளிக்கப்படுகிறது என்று தெரிவித்துள்ளார்.
தந்தை-சகோதரனை இழந்து, மூன்று பெண்பிள்ளைகளுடன் தவிக்கும் ஜெயராஜ் குடும்பத்துக்கு திமுக சார்பில் ரூ.25 லட்சம் நிதியுதவி வழங்கப்படுகிறது.#TNPoliceBrutality -ல் குற்றமிழைத்தவர்களுக்கு தண்டனை கிடைக்க அனைத்து சட்டப் போராட்டங்களுக்கும் திமுக துணை நிற்கும். #JusticeForJeyarajAndFenix pic.twitter.com/Yd95KNMFTd
— M.K.Stalin (@mkstalin) June 26, 2020