கொரோனாவால் இறந்த போலீசார் குடும்பத்துக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு ..!

கொரோனாவால் உயிரிழந்த காவல்துறை அதிகாரிகள், காவலர்கள் குடும்பத்திற்கு ரூ. 25 லட்சம் நிவாரணம்
கொரோனாவால் உயிரிழந்த காவல்துறை அதிகாரிகள் காவல் இவர்கள் குடும்பத்திற்கு தலா 25 லட்சம் நிதியுதவி என தமிழக அரசு தெரிவித்துள்ளது. 13 பேரின் குடும்ப வாரிசுகளுக்கு தலா 25 லட்சம் நிவாரண தொகை வழங்கப்பட்டுள்ளது என தமிழரசு தெரிவித்துள்ளது. மேலும் 36 பேரின் வாரிசுதாரர்களுக்கு தலா 25 லட்சம் நிவாரணம் வழங்க முதல்வர் முக ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
மீதமுள்ள 35 பேரின் முன்மொழிவுகள் பெறப்பட்டவுடன் தலா 25 லட்சம் வழங்க முதலமைச்சர் உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.