#BREAKING: கருப்பு பூஞ்சை சிகிச்சைக்கு ரூ.25 கோடி ஒதுக்கீடு- தமிழக அரசு..!
- முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு ரூ.280 கோடி நன்கொடையாக பெறப்பட்டு உள்ளது.
- முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து கருப்புப் பூஞ்சை நோய் சிகிச்சைக்கு ரூ.25 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கருப்பு பூஞ்சையால் ஆரம்பத்தில் 9 பேர் மட்டும் பாதிக்கப்பட்ட நிலையில் பின்னர் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே வருகிறது. தமிழகத்தில் கருப்பு பூஞ்சையால் 847 பேர் பாதிக்கப்பட்டிருப்பதாக மருத்துவத் துறை தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருப்பு பூஞ்சை சிகிச்சைக்காக மத்திய அரசிடமிருந்து இதுவரை 2,470 குப்பி ஆம்போடெரிசின்-பி மருந்துகளை அனுப்பி வைத்துள்ளது. இந்நிலையில், கருப்புப் பூஞ்சை நோய்க்கு மருந்து வாங்க முதலமைச்சர் பொது நிவாரண நிதியில் இருந்து ரூ.25 கோடி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஒதுக்கி உத்தரவிட்டுள்ளார்.
இதுவரை முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு ரூ.280 கோடி நன்கொடையாக பெறப்பட்டு உள்ளது. சிங்கப்பூர் பிற நாடுகளிலிருந்து ஆக்ஸிஜன் உருளைகள், ஆக்ஸிஜன் செறிவூட்டிகள் வாங்க 41.5 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
கருப்பு பூஞ்சை சிகிச்சைக்கு ரூ.25 கோடி ஒதுக்கீடு..!#MKStalin #BlackFungus pic.twitter.com/kDwXNQgkZ1
— Dinasuvadu Tamil (@DinasuvaduTamil) June 7, 2021