#BREAKING: எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு சொந்தமான இடங்களில் ரூ.25.56 லட்சம் பறிமுதல்..!

முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு சொந்தமான இடங்களில் ரூ.25.56 லட்சத்தை லஞ்ச ஒழிப்புத்துறை பறிமுதல் செய்தனர்.
கடந்த அதிமுக ஆட்சியில் போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்த எம்.ஆர்.விஜயபாஸ்கர் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாகவும், போக்குவரத்து கழகங்களில் ஏற்பட்ட இழப்பீடு, ஊழல் தொடர்பாக எழுந்த புகார்களின் அடிப்படையில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் இன்று காலை அவருக்கு சொந்தமான இடங்களில் சோதனை தொடங்கினர்.
கரூர் மாவட்டத்தில் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வீடு உட்பட 26 இடங்களில் சோதனை நடைபெற்றது. 13 மணி நேரம் நடைபெற்ற சோதனையில் ரூ.25.56 லட்சம் மதிப்பிலான சொத்து மற்றும் முதலீட்டு ஆவணங்கள் உள்ளிட்டவை லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
Live : சீமான் விவகாரம் முதல்… மீனவர்கள் உண்ணாவிரதப் போராட்டம் வரை.!
February 28, 2025
”என்னமோ நான் வயசுக்கு வந்த புள்ளைய கற்பழிச்சு விட்ட மாதிரி பேசுறீங்க ” – சீமான் சர்ச்சைப் பேச்சு.!
February 28, 2025
“நான்தான் சம்மனை கிழிக்கச் சொன்னேன், என்னை கைது செய்ய வேண்டியதுதானே” – சீமான் மனைவி கயல்விழி!
February 28, 2025