தென்னக ரயில்வே மண்டலங்களில் இருந்து தினமும் பல மாநிலங்களுக்கு ரயில் இயக்கப்பட்டு வருகின்றன. இதில் ஏராளமான பயணிகள் பயணம் செய்து வருகின்றனர். ரயில்வே துறையை தனியார் மையமாக்க இருப்பதால் இதனால் பல ஊழியர்களின் வேலை இழக்க நேரிடலாம் என கூறப்படுகிறது.
இந்நிலையில் சென்னை ரயில்வே தற்போது புதிய சிக்கலில் தவித்து வருகிறது. கடந்த ஜூலை மாதம் 17-ம் தேதி தகவல் உரிமைச் சட்டத்தை கீழ் எழுப்பட்ட கேள்விகளுக்கு தென்னக ரயில்வே ஒரு அறிக்கை ஒன்றை சமர்ப்பித்து உள்ளது. அந்த அறிக்கையில் , சென்னை ரயில்வே மண்டலம் சில வருடங்களாக எலி தொல்லையால் அவதிப்பட்டு வருகிறது. அவை பல சேதங்களை செய்து உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.
மேலும் எலிகளை ஒழிக்க அதிகாரிகள் பல முயற்சிகள் செய்து வருகின்றனர். 2016 முதல் 2019 வரை எலிகளை ஒழிக்க மட்டுமே 5.89 கோடி செலவு செய்தோம் என கூறியுள்ளது. கடந்த ஆண்டு குறைந்தபட்சமாக 2,636 எலிகளை பிடித்ததாக கூறியுள்ளனர்.
செங்கல்பட்டு , தாம்பரம் மற்றும் ஜோலார்பேட்டை ஆகிய சந்திப்புகளில் மட்டுமே 1715 எலிகள் பிடிக்கப்பட்டதாகவும் , ரயில்வே பயிற்சி மையங்கள் இருந்து 900 எலிகள் பிடிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.அதில் ஒரு எலியைப் பிடிக்க மட்டுமே 22,334 ரூபாய் செலவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளது.
சென்னை : காலகலப்பு திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகர் நடிகர் கோதண்டராமன். இவர் கடந்த சில நாட்களாகவே உடல் நிலை…
டெல்லி : இன்று நாடாளுமன்ற வளாகமே பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் இயங்கி வருகிறது. ஒருபக்கம், அம்பேத்கரை அமித்ஷா அவமதித்துவிட்டார் என காங்கிரஸ்…
ஆருத்ரா தரிசனம் என்றால் என்ன அதன் பலன்கள் மற்றும் சிறப்புகளை இந்த செய்து குறிப்பில் காணலாம் . சென்னை :சிவபெருமானுக்கு…
டெல்லி : இன்று நாடாளுமன்ற வளாகத்தில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்பிக்கள் மற்றும் பாஜக எம்பிக்கள் தனி தனியாக ஆர்ப்பாட்டத்தில்…
டெல்லி : போனை தயாரிக்கும் வளர்ச்சியில் இந்தியா தற்போது அசுரத்தனமான வளர்ச்சியை கண்டுள்ளதாக கூறப்படுகிறது. ஏனென்றால். இந்தியாவில் தயாரிக்கப்படும் மொபைல் போன்களை…
டெல்லி : இன்று நாடாளுமன்ற கூட்டத்தொடர் சமயத்தில் ஓடிசா மாநிலம் பால்சோர் மக்களவை தொகுதி பாஜக எம்பி பிரதாப் சந்திர…