மின்சார வாரியத்தின் செயல்பாடுகள் போர்க்கால அடிப்படையில் அமைந்துள்ளது என அமைச்சர் செந்தில் பாலாஜி பேட்டி.
தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அவர்கள் சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அவர் கூறுகையில் கடந்த பத்து மாதத்தில் மின்வாரியத்திற்கு ரூ 2,200 கோடி சேமிப்பு உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் வங்கிகளுக்கு செலுத்தக்கூடிய வட்டி சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது என்றும், ஒரு லட்சம் விவசாயிகளுக்கு மின்சாரம் இணைப்பு வழங்கும் திட்டத்தின் கீழ் 98 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு கடந்த 6 மாதங்களில் இலவச மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், மின்சார வாரியத்தின் செயல்பாடுகள் போர்க்கால அடிப்படையில் அமைந்துள்ளது. மேலும் கடந்த ஆட்சியில் நடந்த நிலக்கரி ஊழல் தொடர்பாக முழு அறிக்கை ஒரு வார காலத்திற்குள் கிடைக்கப் பெறும் என்றும் தமிழகத்தில் சீரான மின் விநியோகத்திற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும், இந்த ஆட்சியில் மின் உற்பத்தி திட்டங்கள் மக்களுக்கான திட்டங்களாகவே இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.
மும்பை : ஐபிஎல் தொடரில் நேற்றைய ஆட்டத்தில் மும்பை அணிக்கு எதிரான போட்டியில் 12 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூரு அணி…
சண்டிகர் : ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் - பஞ்சாப் கிங்ஸ் அணிகள் இன்று (ஏப்.08) மோதுகின்றது.…
சென்னை : வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வு இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. அதன்படி, ரூ.818.50…
மும்பை : இன்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் மும்பை அணியும், பெங்களூர் அணியும் மோதியது. இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற மும்பை அணி…
மும்பை : ஒரு பக்கம் மும்பை இந்தியன்ஸ் அணி தொடர்ச்சியாக இந்த சீசனில் தோல்விகளை சந்தித்து வருவது ஒரு கவலையான விஷயமாக…
மும்பை : இன்று வான்கடே மைதானத்தில் நடைபெறும் ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும், பெங்களூர் அணியும் மோதுகிறது. இந்த போட்டியில் முதலில்…