இலவச மின்சாரத்திட்டத்திற்கு ரூ.4508 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் எம்ஆர்கே.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார்.
இன்று இரண்டாவது நாளாக சட்டப்பேரவை கூடியுள்ள நிலையில், தமிழகத்தில் முதல் முறையாக இன்று சட்டசபையில் வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. இந்த வேளாண் இ-பட்ஜெட்டை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தாக்கல் செய்து வருகிறார்.
இந்நிலையில்,இலவச மின்சாரத்திட்டத்திற்கு ரூ.4508 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் எம்ஆர்கே.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார்.மேலும்,இது தொடர்பாக அவர் கூறியதாவது:
“வழமான விவசாயத்திற்கு பாசன நீர் மிக முக்கியம்,தமிழ்நாட்டில் கிணறு,ஆழ்துறை கிணற்றில் உள்ள நீரை பம்பு செட்டுகள் மூலம் பாசனத்திற்கு பயன்படுத்திட மின்சாரம் மிக இன்றியமையாதது.இதற்காக சுமார்,22,19,000 மின்மோட்டர்களுக்கு இலவச மின்சாரம் வழங்கப்படுகிறது.
பயிற்சாகுபடிக்கு விவசாயிகள் படும் இன்னல்களை கருத்தில்கொண்டு,சராசரியாக ஒவ்வொரு பம்புசெட்டுக்கும் ஆண்டு ஒன்றுக்கு ரூ.20 ஆயிரத்தை அரசே விவசாயிகள் சார்பாக மின்சாரவாரியத்திற்கு செலுத்துகிறது.மேலும்,நடப்பு ஆண்டிற்கான இலவச மின்சாரத்திட்டத்திற்காக தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு ரூ.4508. கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது”,என்று தெரிவித்தார்.
மும்பை : ஐபிஎல் 2025-ன் 33வது போட்டி மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நடைபெற்றது. முதலில்…
மும்பை : மும்பை வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நடைபெற்று வருகிறது. டாஸ்…
மும்பை : இன்றைய லீக் ஆட்டத்தில், மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நடைபெற உள்ளது. இந்த…
பெல்ஜியம்: GT4 தொடர் விரைவில் தொடங்கவுள்ள நிலையில், அஜித் குமாரின் பந்தயக் குழு பெல்ஜியத்தின் புகழ்பெற்ற சர்க்யூட் டி ஸ்பாவிற்கு…
சென்னை : கடந்த ஏப்ரல் 8 ஆம் தேதி, தந்தை பெரியார் திராவிடர் கழகம் நடத்திய ஈ.வி. ராமசாமியை (பெரியார்)…
சென்னை : வக்ஃப் திருத்த சட்டத்தின்படி புதிய உறுப்பினர்களை நியமனம் செய்யக் கூடாது என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும்,…