ரூ.2000 சிறப்பு நிதி!!தடை கோரிய வழக்கு இன்று விசாரணை!!
2000 ரூபாய் சிறப்பு நிதி வழங்க தடை கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இது தொடர்பாக சட்டப்பேரவையில் முதலமைச்சர் பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பில், இந்த மாத இறுதிக்குள் ரூ.2000 பணம் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும்.தமிழ்நாடு முழுவதும் வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ளவர்களுக்கு இந்த பணம் கிடைக்கும்.60 லட்சம் பேர் பலனடைவார்கள் என்று முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்தார்.
இந்நிலையில் வறுமை கோட்டிற்கு கீழுள்ள குடும்பங்களுக்கு ரூ.2000 வழங்கும் தமிழக அரசின் முடிவை எதிர்த்து சட்டப்பஞ்சாயத்து இயக்கத்தை சேர்ந்த செந்தில் ஆறுமுகம் சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்துள்ளார்.மேலும் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் ஓட்டுக்கு லஞ்சம் கொடுக்கும் வகையில் திட்டம் இருப்பதாக மனுவில் குற்றச்சாட்டியுள்ளார்.
இந்நிலையில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக சென்னை உயர்நீதிமன்றம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.