ரூ.2,000 சிறப்பு நிதி வழங்குவது நிறுத்தி வைப்பு!தமிழக அரசு தகவல்
- 2000 ரூபாய் சிறப்பு நிதி வழங்க தடை கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
- மக்களவை தேர்தல் காரணமாக ரூ.2,000 சிறப்பு நிதி உதவி வழங்குவது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது என்று அரசு தெரிவித்துள்ளது .
சட்டப்பேரவையில் முதலமைச்சர் பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பில், இந்த ஆண்டு தமிழக அரசின் சிறப்பு நிதியாக ரூ.2000 பணம் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும்.தமிழ்நாடு முழுவதும் வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ளவர்களுக்கு இந்த பணம் கிடைக்கும்.60 லட்சம் பேர் பலனடைவார்கள் என்று முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்தார்.அதன்படி இதற்கான கணக்கெடுக்கும் பணியும் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் ரூ.2000 வழங்கும் தமிழக அரசின் முடிவை எதிர்த்து விழுப்புரத்தை சேர்ந்த கருணாநிதி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்தார்.
இந்த மனு தொடர்பான விசாரணையில் இன்று தமிழக அரசு பதில் அளித்தது.அதில், மக்களவை தேர்தல் காரணமாக ரூ.2,000 சிறப்பு நிதி வழங்குவது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.அதேபோல் கணக்கெடுக்கும் பணியும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது .