பெட்ரோல் பங்குகளில் ரூ.2000 நோட்டுகள் வாடிக்கையாளர்களிடம் வாங்கப்படும்..! – தமிழ்நாடு பெட்ரோல் பங்க் உரிமையாளர் சங்கம்
தமிழகத்தில் உள்ள பெட்ரோல் பங்குகளில் ரூ.2000 நோட்டுகள் வாடிக்கையாளர்களிடம் வாங்கப்படும் என அறிவிப்பு.
கடந்த 19-ஆம் தேதி புழக்கத்தில் இருந்த 2000 ரூபாய் நோட்டு திரும்ப பெறப்படுவதாக ரிசர்வ் வங்கி அறிவித்திருந்தது. இந்த நிலையில், 2000 ரூபாய் நோட்டு மாற்றம் தொடர்பாக வங்கிகளுக்கு வழிகாட்டுதல் நெறிமுறைகளை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது.
இந்த நிலையில், நாளை முதல் ரூ.2000 ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் மாற்றி கொள்ளலாம் என்றும், 2023 செப்டம்பர் 30ஆம் தேதி வரை 2000 ரூபாய் நோட்டுகள் திரும்ப பெறப்படும் என்றும் ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. இந்த நிலையில், தமிழகத்தில் உள்ள பெட்ரோல் பங்குகளில் ரூ.2000 நோட்டுகள் வாடிக்கையாளர்களிடம் வாங்கப்படும் என தமிழ்நாடு பெட்ரோல் பங்க் உரிமையாளர் சங்கம் அறிவித்துள்ளது.