ரேஷன் கடை ஊழியர்களுக்கு ரூ.200 செலவின தொகை – தமிழக அரசு அறிவிப்பு
ரேஷன் கடை ஊழியர்களுக்கு ரூ.200 செலவின தொகை வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
கொரோனா வைரஸின் தாக்கம் இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்து வந்த நிலையில் 3-ஆம் கட்டமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.இந்த சமயத்தில் நாட்டில் உள்ள அத்தியாவசிய கடைகளை தவிர பிற கடைகள் ,வணிக வளாகங்கள் என அனைத்தும் மூடப்பட்டது.
எனவே தமிழக அரசு ஏப்ரல், மே மற்றும் ஜூன் ஆகிய மாதங்களுக்கு இலவச ரேஷன் பொருட்கள் வழங்கப்படும் என்று அறிவித்தது.இதன் விளைவாக ரேஷன் கடை ஊழியர்கள் கொரோனா பரவி வரும் இந்த காலத்திலும் பணியில் இருந்து வருகின்றனர்.
இந்நிலையில் தமிழக அரசு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.அந்த அறிவிப்பில், ஊரடங்கு காலத்தில் பணியாற்றும் ரேஷன் கடை ஊழியர்களுக்கு செலவின கையாக நாளொன்றுக்கு ரூ.200வழங்கப்படும்.இதனால் 34,000 ரேஷன் கடைகளில் பணியாற்றும் 24,000 பணியாளர்கள் இதன் மூலம் பயன் பெறுவார்கள் என்று தெரிவித்துள்ளது.