சிறு, குறு, நடுத்தர தொழிலுக்கு ரூ.200 கோடி சிறப்பு கடனுதவி – முதல்வர் பழனிசாமி அறிவிப்பு.!
கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால், மக்களில் அன்றாட வாழ்வு மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழக அரசு சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு பல்வேறு சிறப்பு சலுகைகளை அறிவித்துள்ளது.
அந்த வகையில் தொழில் முதலீட்டு கழகத்திடம் (TIIC) கடன் பெற்ற சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. சிறு, குறு,நடுத்தர தொழில் நிறுவனங்கள் கடன் தவணைகளை செலுத்த ஜூன் 30 வரை அவகாசம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. மேலும் 2,000 சிறு, குறு,நடுத்தர தொழில் நிறுவனங்களின் அவசர மூலதன தேவைகளுக்கான கடனுதவி வழங்கப்படும் என்றும் கொரோனா என்ற கோவிட் 19 நிவாரணம், மேம்பாட்டு திட்டத்தின் கீழ் சுமார் ரூ.200 கோடி கடனுதவி வழங்கப்படும் என முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
இதையடுத்து சிப்காட் தொழில் பூங்காவில் உள்ள நிறுவனங்கள் பராமரிப்பு கட்டணம் செலுத்த 3 மாத கால அவகாசம் என்றும் சிப்காட் நிறுவனத்திடம் மென்கடன் பெற்ற நிறுவனங்கள், கடன் தவணையை செலுத்த 3 மாத கால அவகாசம் என்று முதலமைச்சர் அறிவித்துள்ளார்.