வீரமரணமடைந்த தமிழக ராணுவ வீரர் குடும்பத்திற்கு ரூ.20 லட்சம் நிதியுதவி.!

Default Image

தமிழகத்தை சேர்ந்த சிஆர்பிஎப் வீரர் குடும்பத்திற்கு ரூ.20 லட்சம் நிதியுதவி வழங்குவதாக முதல்வர் பழனிச்சாமி அறிவித்துள்ளார்.

வீரமரணமடைந்த தமிழகத்தை சேர்ந்த சிஆர்பிஎப் வீரர் குடும்பத்திற்கு ரூ.20 லட்சம் நிதியுதவி வழங்குவதாக முதல்வர் பழனிச்சாமி அறிவித்துள்ளார். சிஆர்பிஎப் வீரர் சந்திர சேகர் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு பணி வழங்கவும் முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடனான துப்பாக்கி சண்டையில் சந்திர சேகர் வீரமரணமடைந்தார். மேலும் சந்திர சேகரின் குடும்பத்திற்கு நேரில் ஆதரவு கூறவும், அரசு சார்பில் மரியாதையை செலுத்தவும் முதல்வர் உத்தரவிட்டுள்ளார். 

இதனிடையே, நேற்று ஜம்மு காஷ்மீர் பகுதி குப்ராவிலுள்ள கிரால்குண்ட் வங்கம்-காசியாபாத் என்ற இடத்தில் சி.ஆர்.பி.எஃப் வீரர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அவர்கள் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த தாக்குதலில் தீவிரவாதிகளில் ஒருவர் சுட்டு கொல்லப்பட்டாலும், சிஆர்பிஎஃப் படையினரிலும் 3 வீரர்கள் உயிரிழந்தனர். இதில், தமிழகத்தின் தென்காசி மாவட்டம் செங்கோட்டை அருகே உள்ள மூன்று வாய்க்கால் என்ற பகுதியைச் சேர்ந்த சந்திர சேகர் மற்றும் வெளிமாநிலத்தை சேர்ந்த அஷ்வினி குமார் யாதவ், சந்தோஷ்குமார் ஆகிய மூவர் வீரமரமடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்