ரூ.20 லட்சம் கோடி அல்ல! வெறும் ரூ.1.80 லட்சம் கோடிதான்! – ப.சிதம்பரம் ட்வீட்
பொருளாதார ஊக்கத் திட்டத்தின் மதிப்பு ரூ 20 லட்சம் கோடி அல்ல, வெறும் ரூ.1,86,650 கோடி தான் என்று ப. சிதம்பரம் தெரிவித்துள்ளார்
நாடு முழுவதும் கொரோனா பரவலை தடுக்க அமல்படுத்தப்பட்ட ஊரடங்கால் நாட்டின் பொருளாதாரம் பெரும் சரிவை கண்டுள்ளது. இந்திய பொருளாதாரத்தை மீட்டெடுக்க பிரதமர் மோடி ரூ.20 லட்சம் கோடிக்கான பொருளாதார சிறப்பு திட்டத்தை அறிவித்தார். இதனை சுயசார்பு பாரதம் என்ற பெயரில் பல்வேறு பிரிவினரும் பலன் பெறும் வகையில் பொருளாதார மீட்பு திட்டங்களை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தொடந்து 5 கட்டங்களான அறிவிப்புகளை வெளியிட்டார்.
மேலும், பிரதமர் அறிவித்த, ரூ.20 லட்சம் கோடி பொருளாதார சிறப்பு திட்டத்தின் 5 கட்ட அறிவுப்புகளின் மொத்த மதிப்பு 11,02,650 கோடி என்றும் ரிசர்வ் வங்கி ஏற்கனெவே அளித்த சலுகைகளின் மதிப்பு 8,01,603 கோடி எனவும், இதனால் பொருளாதார திட்டத்தின் மொத்தம் மதிப்பு ரூ.20,97,053 கோடி என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்திருந்தார். இந்நிலையில், பொருளாதார ஊக்கத் திட்டத்தின் மதிப்பு ரூ 20 லட்சம் கோடி அல்ல, வெறும் ரூ.1,86,650 கோடி தான் என்று ப. சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள ப.சிதம்பரம், பிரதமரும் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனும் அறிவித்த, பொருளாதார சிறப்பு ஊக்கத் திட்டத்தின் மதிப்பு ரூ.20 லட்சம் கோடி அல்ல என்றும் வெறும் ரூ.1,86,650 கோடி தான் என்று கூறியுள்ளார். ரூ.1,86,650 கோடி மட்டுமே என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், இந்த எண்ணை எப்பொழுதும் நினைவில் வைத்து கொள்ளுங்கள் என்றும் இன்னும் சில மாதங்களில் உண்மை தெரிந்துவிடும் என்று ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
பிரதமரும் நிதி அமைச்சரும் அறிவித்த பொருளாதார ஊக்கத் திட்டத்தின் மதிப்பு ரூ 20 லட்சம் கோடி அல்ல, வெறும் ரூ 1,86,650 கோடி தான்
ரூ 1,86,650 கோடி மட்டுமே! இந்த எண்ணை எப்பொழுதும் நினைவில் கொள்ளுங்கள். இன்னும் சில மாதங்களில் உண்மை தெரிந்துவிடும்
— P. Chidambaram (@PChidambaram_IN) May 18, 2020