#BREAKING: பெற்றோர் இல்லாத பெண் குழந்தைகளுக்கு ரூ.2 லட்சம் வழங்கப்படும்-முதலமைச்சர் அறிவிப்பு

ஆதரவற்ற பெண்குழந்தைகளுக்கு 21-வயது நிரப்பும்போது ரூ.2 லட்சம் வழங்கப்படும் என்று முதலமைச்சர் பழனிசாமி அறிவித்துள்ளார்.
பட்ஜெட்டை துணை முதலமைச்சரும் ,நிதி அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்த பின்னர் தமிழக சட்டப்பேரவையை பிப்ரவரி 17-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார் சபாநாயகர் தனபால்.17-ஆம் தேதி காலை 10 மணிக்கு மீண்டும் சட்டசபை கூடும் என்று தெரிவிக்கப்பட்டது.அதன்படி 17-ஆம் தேதி முதல் தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெற்றது.இன்றும் தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் இன்று தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது.அப்பொழுது முதலமைச்சர் பழனிசாமி , ஆதரவற்ற பெண்குழந்தைகளுக்கு 21-வயது நிரப்பும்போது ரூ.2 லட்சம் வழங்கப்படும் என்று 110 விதியின் கீழ் அறிவித்துள்ளார்.பெற்றோர் இல்லாத பெண் குழந்தைகளின் சமூக பொருளாதார நிலையை கருதி சிறப்பு உதவி தொகை அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
பெண்களை இழிவாக பேசிய விவகாரம்: “பொன்முடி மீது வழக்குப்பதிவு செய்க” – உயர்நீதிமன்றம் அதிரடி..!
April 17, 2025
வக்ஃப் திருத்த சட்டம்: ”இஸ்லாமியர்களின் வயிற்றில் பாலை வார்த்துள்ளது”- தவெக தலைவர் விஜய்.!
April 17, 2025