ஆற்றில் மூழ்கி உயிரிழந்த மாணவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.2 லட்சம் நிவாரணம்; முதல்வர் அறிவிப்பு.!
கல்வடங்கம் காவிரி ஆற்றில் மூழ்கி உயிரிழந்த மாணவர்களின் குடும்பத்தினருக்கு 2 லட்ச ரூபாய் நிவாரணமாக அறிவிப்பு.
சேலம் மாவட்டம் சங்ககிரி தாலுகா கல்வடங்கம் காவிரி ஆற்றில், மாணவர்கள் 4 பேர் குளிக்க சென்றுள்ளனர். ஆற்றின் ஆழம் குறைவாக இருந்துள்ளதால் நடுப்பகுதி வரை சென்றுள்ளனர், அப்போது ஆழத்தில் சிக்கிய ஒரு மாணவரை, காப்பாற்றும் முயற்சியில் மற்ற மாணவர்களும் ஆற்றில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து மிகவும் வேதனை அடைந்ததாக தெரிவித்த முதல்வர் ஸ்டாலின், உயிரிழந்த மாணவர்களின் குடும்பத்தினருக்கு, தனது ஆறுதல் கூறியுள்ளார் மற்றும் அவர்களின் குடும்பத்தினருக்கு பொது நிவாரண நிதியிலிருந்து நிவாரணத்தொகையாக ரூ.2 லட்சம் அறிவித்துள்ளார்.