#BREAKING: தமிழகத்தில் 4 நாட்களில் ரூ.2.77 கோடி அபராதம் வசூல்..!
தமிழகத்தில் முகக்கவசம் அணியாதவர்களிடத்தில் நேற்று வரை ரூ.2,52,34,900 அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா விதிகளை மீறிவர்களிடம் நான்கு நாட்களில் ரூ.2.77 கோடி அபராதம் காவல்துறை வசூல் செய்துள்ளனர். ஏப்ரல் 8-ம் தேதியில் இருந்து 11 ஆம் தேதி வரை மாஸ்க், தனிமனித இடைவெளியை பின்பற்றாதவர்களிடம் அபராதம் வசூல் செய்யப்பட்டுள்ளது.
மாஸ்க் அணியாதது, தனிநபர் இடைவெளியை பின்பற்றாதது தொடர்பாக 1.30 லட்சம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. தனிநபர் இடைவெளியை பின்பற்றாதது மீறியதற்காக ஏப்ரல் 8 முதல் 11 வரை மாநிலம் முழுவதும் மொத்தம் 6465 வழக்குகள் தமிழக போலீசாரால் பதிவு செய்யப்பட்டுள்ளன.
சென்னை நகரை தவிர்த்து பிற இடங்களில் முகக்கவசம் அணியாதவர்களிடம் மட்டும் 2.52 கோடி வசூல் செய்யப்பட்டுள்ளது. சென்னை நகரை தவிர்த்து பிற இடங்களில் தனிநபர் இடைவெளியை பின்பற்றாதது மீறியதற்காக ரூ.25 லட்சம் வசூல் செய்யப்பட்டுள்ளது. கடந்த 8-ஆம் தேதி முதல் இந்த தொகை வசூலிக்கப்பட்டுள்ளதாக போலீஸ் தரப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.