நாள்தோறும் ஆவின் பாலில் ஊழல் நடைபெற்று வருவதாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் குற்றசாட்டு.
சென்னையில் செய்தியர்களிடம் பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், ஆவினில் தினந்தோறும் பாலில் 2.40 கோடி மதிப்புள்ள ஊழல் நடைபெற்று வருவதாக புகார் கூறியுள்ளார். ஒரு நாளைக்கு 37 லட்சம் லிட்டர் பால் தமிழ்நாடு முழுவதும் விற்பனையாகிறது. இதில் ஒரு நாளுக்கு 5.50 லட்சம் லிட்டர் பாலை நாசர் என்ற பூனைக்குட்டி குடித்துவிட்டது என பால்வள துறை அமைச்சர் நாசரை , ஜெயக்குமார் கிண்டலடித்தார்.
ஆவினில் தினந்தோறும் கொள்ளையடிக்கும் 5.50 லிட்டர் பாலின் விலை, ரூ.2.40 கோடி என தெரிவித்தார். ஒரு அரை லிட்டர் பாலில் சுமார் 70 மிலி அளவுக்கு குறைகிறது. இதன் மூலம் ஆண்டுக்கு ரூ.800 கோடி ஊழல் செய்துள்ளார். விஞ்ஞான பூர்வமாக ஊழல் செய்வது திமுகவிற்கு கைவந்த கலை. ஆவினில் ஊழல் செய்தது தொடர்பாக பால்வள துறை அமைச்சர் நாசரை விசாரணை செய்ய வேண்டும்.
நீதிபதி தலைமையில் விசாரணை செய்ய வேண்டும், துறை ரீதியான விசாரணை எந்த விதத்திலும் நியாயம் கிடைக்காது இன்றும் குறிப்பிட்டார். இதனிடையே, ஆவின் பால் பாக்கெட்டுகளில் எடை குறைந்து விற்பனை செய்யப்படுவதாக தகவல் வெளியாகியது. இதனைத்தொடர்ந்து எதிர்க்கட்சிகள் ஆவின் நிறுவனம் ஊழல் செய்வதாக குற்றம்சாட்டி வருகின்றனர்.
சென்னை -90 கிட்ஸ்க்கு பிடித்த பெட்டிக்கடை தேன் மிட்டாய் சுலபமான முறையில் வீட்டிலேயே செய்வது எப்படி என இந்த செய்தி…
திருவாரூர் : உலக நாடுகள், உலக மக்கள் என அனைவரும் பெரிதளவு எதிர்பார்க்கும் அமெரிக்க அதிபர் தேர்தல் இன்னும் சற்று…
சென்னை : சென்னை : தமிழகத்தில் சில இடங்களில் மின் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் தினமும் மின்தடை ஏற்படுவது வழக்கம்.…
திருச்சி : ஆட்சியில் பங்கு அதிகாரத்தில் பங்கு, தவெக மாநாடு என தமிழக அரசியல் வட்டாரத்தில் கூட்டணி ஆட்சி குறித்தும்,…
சென்னை : தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி பல மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கிக்கொண்டு இருக்கும் நிலையில், இன்று (நவம்பர்5)…
திருச்சி : வரும் டிசம்பர் மாதம் 6ஆம் தேதி அண்ணல் அம்பேத்கர் நினைவுகளை முன்னிட்டு சென்னையில் ஓர் புத்தக வெளியீட்டு…