#BREAKING: மின்சாரத்துறைக்கு ரூ.19872 கோடி ஒதுக்கீடு.., தமிழகம் மின்மிகை மாநிலம் அல்ல – நிதியமைச்சர்..!
மின்சாரத்துறைக்கு ரூ.19872 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது என பழனிவேல் தியாகராஜன் தெரிவித்தார்.
பட்ஜெட் உரையில் நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், கடந்த சில ஆண்டுகளில் தமிழ்நாடு மின்மிகை மாநிலமாக மாறியிருக்கிறது என்பது உண்மைக்கு மாறானது. 2500 மெகாவாட் மின்சாரம் மின் சந்தையில் இருந்து வாங்கப்படுகிறது.
அடுத்த 10 ஆண்டுகளில் சொந்த மின்னுற்பத்தி நிலையங்களின் வாயிலாக மாநிலத்தில் 17 ஆயிரத்து 970 மெகாவாட் மொத்த மின் உற்பத்தித் திறன் கூடுதலாக சேர்க்கப்படும் . மின்சாரத்துறைக்கு ரூ.19872 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது என தெரிவித்தார்.