சென்னை ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்காக மத்திய அரசு தன் பங்காக ரூ.196 கோடி விடுவிப்பு
ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் சென்னையில் ரூ.947 கோடியில் 40 திட்டப்பணிகள் செயல்படுத்தப்படுகின்றன என்று சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் வெளியிட்ட அறிவிப்பில்,சென்னை ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்காக மத்திய அரசு தன் பங்காக ரூ.196 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது .ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் சென்னையில் ரூ.947 கோடியில் 40 திட்டப்பணிகள் செயல்படுத்தப்படுகின்றன .
ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் சென்னையில் இதுவரை ரூ.25.7 கோடியில் 9 பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. ரூ.491.86 கோடி மதிப்பில் 22 திட்டங்கள் செயல்பாட்டில் உள்ளன .4 திட்டங்கள் ரூ.191.90 கோடி மதிப்பில் ஒப்பந்தம் கோரப்பட்டு பரிசீலனையில் உள்ளன என்று சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.