சிறுமி மித்ராவுக்கு ரூ.16 கோடி மதிப்பிலான ஊசி செலுத்தப்பட்டது!!

Default Image

அரிதான நோயால் பாதிக்கப்பட்ட சிறுமி மித்ராவுக்கு ரூ.16 கோடி மதிப்பிலான ஊசி செலுத்தப்பட்டது.

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தைச் சேர்ந்த சிறுமி மித்ரா (Autosomal Recessive Spinal Muscular Atropy) என்ற அரிய வகை நோயால் பாதிக்கப்பட்டிருந்தார். இதனால் அக்குழந்தையால் நடக்க முடியாது. உரிய மருத்துவம் அளிக்க முடியாத நிலையில், உயிருக்கும் ஆபத்து வரும் சூழலுக்கு அக்குழந்தை தள்ளப்பட்டது.

சிறுமியின் சிகிச்சைக்காக ஸ்விட்சர்லாந்து நாட்டில் தயாரிக்கப்படும் (zolgensma) என்ற ஊசி மருந்து தேவைப்பட்டது. இதன் விலை ரூ.16 கோடி என்றும் அதனை இந்தியாவில் இறக்குமதி செய்ய, ரூ.6 கோடி வரி செலுத்த வேண்டும் எனவும் கூறினர் பொதுமக்கள் மற்றும் தன்னார்வலர்கள் கொடுத்த நிதி மூலம் ரூ.16 கோடி சேர்ந்தது.

ஆனால், மருந்தின் இறக்குமதி வரி ரத்து செய்தால் மட்டுமே இந்த மருந்து கிடைக்கும் என பலரும் வேண்டுகோள் விடுத்த நிலையில், மத்திய, மாநில அரசுகள் மருந்தின் மீதான இறக்குமதி வரியை ரத்து செய்தது. இதனால் சிறுமிக்கு மருந்து கிடைப்பது உறுதி செய்யப்பட்டது.

இந்த நிலையில், முதுகு தண்டுவட சிதைவு நோயால் பாதிக்கப்பட்டுள்ள சிறுமி மித்ராவுக்கு பெங்களூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் ரூ.16 கோடி மதிப்பிலான இறக்குமதி செய்யப்பட்ட ஊசி செலுத்தப்பட்டது என்று கூறப்படுகிறது. எனவே, பொதுமக்கள் மற்றும் தன்னார்வலர்கள்

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்