சென்னை:2020-2021 ஆம் ஆண்டு அரவை பருவத்திற்கு கரும்பு வழங்கிய விவசாயிகளுக்கு உற்பத்தி மற்றும் சிறப்பு ஊக்கத்தொகையாக ரூ.150.89 கோடியை முதல்வர் வழங்கியுள்ளார்.
சர்க்கரை ஆலைகளுக்கு 2020-2021 ஆம் ஆண்டு அரவை பருவத்திற்கு கரும்பு வழங்கிய விவசாயிகளுக்கான ரூ.150.89 கோடி உற்பத்தி மற்றும் சிறப்பு ஊக்கத்தொகையை முதல்வர் ஸ்டாலின் அவர்கள் சென்னை தலைமைச்செயலகத்தில் இன்று காலை வழங்கியுள்ளார்.
இதனைத் தொடர்ந்து,காணொலி வாயிலாக வேளாண்மை மற்றும் உழவர்நலத்துறை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட பல்வேறு திட்டங்களையும் முதல்வர் அவர்கள் தொடங்கி வைத்துள்ளார்.அதன்படி,வேளாண்மைப் பொறியியல் துறை சார்பில் இ-வாடகை ஆன்லைன் செயலியை தொடங்கி வைத்த முதல்வர்,வேளாண்மை விற்பனை வாரியத்தின் மூலம் ரூ.97 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள கட்டடங்களையும் காணொலி வாயிலாக திறந்து வைத்துள்ளார்.
மேலும்,பருத்தி விவசாயிகளின் நலனுக்காக ரூ.11 கோடி மதிப்பில் “நீடித்த நிலையான பருத்தி இயக்கம்” என்ற திட்டத்தையும் முதல்வர் தொடங்கி வைத்துள்ளார்.
மலேசியா : ஐசிசி 19 வயதுக்குட்பட்ட மகளிர் டி20 உலகக் கோப்பை இறுதி போட்டியில் இந்திய அணியின் அபாரமான பந்து…
மும்பை : இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5வது (கடைசி) டி20 போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் இன்று…
சென்னை : வரும் பிப்ரவரி 5ஆம் தேதி புதன்கிழமை அன்று ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.…
சென்னை : தவெகவின் 2ஆம் ஆண்டு தொடக்க விழா கொண்டாட்டங்கள் இன்று சென்னை பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடக்கின்றன.…
சென்னை : தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் வரும் 7ம் தேதி சென்னை கட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெறும் என…
லேசியா : ஐசிசி 19 வயதுக்குட்பட்ட மகளிர் டி20 உலகக் கோப்பையின் இறுதிப் போட்டியில் இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி,…