பாஜக வேட்பாளர்களின் தேர்தல் செலவுக்காக ரூ.13 கோடி..? வானதி ஸ்ரீனிவாசன் விளக்கம் ..!

Default Image

வேட்பாளர்களின் தேர்தல் செலவுக்காக பாஜக ரூ.13 கோடி கொடுத்தது என்பது உண்மையில்லை என வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

சர்ச்சைகளுக்கு பெயர் போன பாஜக ஆதரவாளர் எஸ்.வி.சேகர் மீண்டும் சர்ச்சைக்குரிய பேச்சால் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். சமீபத்தில் ட்விட்டர் ஸ்பேசஸ் (twitter space) என்பது ஆடியோ மூலம் குழுவாக பேசலாம். இந்த ட்விட்டர் ஸ்பேஸஸ்ஸில் பாஜக நிர்வாகிகள் மற்றும் ஆதரவாளர்கள் கூட்டம் நடைபெற்றது. அதில், நடிகர் எஸ்.வி.சேகர் கலந்துகொண்டு பேசினார்.

இந்த கூட்டத்தில் நடிகர் எஸ்.வி.சேகர் பேசிய பேச்சால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் பாஜக வேட்பாளர்களுக்கு பாஜக தலைமை வேட்பாளர்கள் ஒவ்வொருவருக்கும் தலா ரூ.13 கோடி கொடுத்திருப்பதாக தான் கேள்விப்பட்டதாகவும் அதற்கு அவர்கள் முறையாக கணக்கு கொடுக்க வேண்டும் என்று எஸ்.வி.சேகர் கூறினார்.

மேலும், தேர்தலில் பாஜக வேட்பாளர்கள் மோடியின் படத்தைப் பயன்படுத்தாமல் ஜெயலலிதா படத்தைப் பயன்படுத்தினார்கள். நான் வேட்பாளராக இருந்திருந்தால்  மோடியின் படத்தைப் பயன்படுத்தி இருந்திருப்பேன் என தெரிவித்தது தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், பாஜக நிர்வாகி எஸ்.வி.சேகர் பேசியது குறித்து பாஜக தேசிய மகளிரணி தலைவரும், பாஜக எம்.எல்.ஏ வானதி ஸ்ரீனிவாசனிடம் எழுப்பிய கேள்விக்கு, வேட்பாளர்களின் தேர்தல் செலவுக்காக பாஜக ரூ.13 கோடி கொடுத்தது என்பது உண்மையில்லை; யாரோ இருவர் பேசிய ஆடியோ எப்படி உண்மையாகும்.? என தெரிவித்துள்ளார்.

தேர்தல் ஆணையத்தின் படி, சட்டமன்றத் தேர்தலில் ஒரு வேட்பாளர் அதிகபட்சமாக 30 லட்சத்து 80 ஆயிரம் வரை செலவு செய்யலாம். அதற்கு மேல் செலவு செய்தால் தேர்தல் விதி மீறல் ஆகும். எஸ்.வி.சேகர் கூறியதை வைத்து பார்த்தால் பாஜக சார்பில் தமிழகத்தில் 20 தொகுதிகளில் போட்டியிட்டனர். அப்படியென்றால் பாஜக நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் ரூ.260 கோடி பணத்தை செலவிட்டுள்ளதா..? என்ற கேள்வி எழுந்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்