வேளாண் இயந்திரங்களுக்கு ரூ.125 கோடி, 10 லட்சம் பனை விதைகள்- பட்ஜெட்டில் அறிவிப்பு.!

Default Image

வேளாண்துறை அமைச்சர், 2023-24க்கான வேளாண் பட்ஜெட் உரையில் வேளாண் இயந்திரங்களுக்கு ரூ.125 கோடி ஒதுக்கீடு.

தமிழக சட்டப்பேரவையில் வேளாண்துறை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் அவர்கள், வேளாண் பட்ஜெட்டை உரையை வாசித்து வருகிறார். நேற்று 2023-24-ஆம் நிதியாண்டுக்கான தமிழக பட்ஜெட் சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் மின்னணு வடிவில் இந்த ட்ஜெட்டை தாக்கல் செய்திருந்தார்.

இந்த நிலையில் இன்று அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் வேளாண் பட்ஜெட் உரையில், விவசாயிகளுக்கு வேளாண் இயந்திரங்கள் மற்றும் வாடகைக்கு இயந்திரங்கள் வழங்குவதற்கு ரூ.125 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளார்.

பனை சாகுபடியினை ஊக்குவிக்க, பனை விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கு ரூ.2 கோடி ஒதுக்கீடு மற்றும் விவசாயிகளுக்கு 10 லட்சம் பனைவிதைகள் வழங்கப்படும் எனவும் அறிவித்துள்ளார். மேலும் பனை மரம் ஏறும் விவசாயிகளின் சிரமத்தைப்போக்கும் வகையில் மரம் ஏறும் எந்திரம் கண்டுபிடிப்பவர்களுக்கு பரிசு வழங்கப்படும் எனவும் அமைச்சர் தனது உரையில் அறிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்