#குட் நியூஸ்: ரூ.12,110 கோடி பயிர் கடன் தள்ளுபடி – விவசாயிகள் பெரும் வரவேற்பு.!

Default Image

கூட்டுறவு வங்கிகளில் வாங்கிய பயிர் கடன்கள் ரூ.12,110 கோடி தள்ளுபடி செய்யப்பட்டதை விவசாயிகள் வரவேற்பு அளித்து வருகின்றனர்.

கடந்த 2-ஆம் தேதி தமிழக சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் கலைவாணர் அரங்கில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உரையுடன் தொடங்கியது. இதையடுத்து சபாநாயகர் தனபால் தலைமையில் நடைபெற்ற அலுவல் ஆய்வுக்குழு கூட்டத்தில் கூட்டத்தொடர் குறித்து முடிவு எடுக்கப்பட்டது. இதில், சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், இன்று நடைபெற்று வரும் சட்டப்பேரவை கூட்டத்தொடரில் ஆளுநர் உரைக்கும் நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதமும், பதிலுரையும் நடைபெற்றது. இதன்பின் சட்ட மசோதா ஆய்வு செய்தலும், நிறைவேற்றுதலும் நடைபெற்று வருகிறது. இதில், பேசிய முதல்வர் பழனிசாமி, தமிழக சட்டப்பேரவையில் விதி 110-ன் கீழ் கூட்டுறவு வங்கியில் விவசாயிகள் வாங்கிய ரூ.12,110 கோடி தள்ளுபடி செய்வதாக அறிவித்துள்ளார்.

பயிர் கடன் தள்ளுபடி மூலம் 16.43 லட்சம் விவசாயிகள் பயனடைவார்கள் என்றும் தெரிவித்துள்ளார். கொரோனா காலத்தில் விவசாயிகள் அதிகம் பாதிக்கப்பட்டதாக தெரிவித்து, முதல்வர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். மேலும், உழுவார் உலகத்தார்க்கு ஆணிஅஃ தாற்றாது, எழுவாரை எல்லாம் பொறுத்து என்ற குறளையும் மேற்கொளக்காட்டியுள்ளார். கடந்த 2016-ஆம் ஆண்டில் விவசாயிகளின் கூட்டுறவு வங்கி பயிர் கடனை ரத்து செய்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

முதல்வரின் பயிர் கடன் தள்ளுபடி அறிவிப்புக்கு விவசாயிகள் வரவேற்பு அளித்து வருகின்றனர். இதுகுறித்து பேசிய விவசாய சங்கத்தின் பிஆர் பாண்டியன், நாங்கள் தொடர்ந்து வலியுறுத்தியதை, எதிர்பார்க்காத நேரத்தில் முதல்வர் அறிவித்துள்ளது மிகுந்த வரவேற்புக்குரியது. இதனை மகிழ்ச்சியுடன் வரவேற்கிறோம், முதல்வரை பாராட்டுகிறோம் என்று கூறியுள்ளார். தொடர்ந்து பேசிய அவர், கொரோனா காலத்தில் முழுவதும் அழிந்துவிட்டது. பொருளாதாரம் முற்றிலும் நலிவடைத்துள்ளது.

விவசாயிகள் உற்பத்தியை அதிகரித்ததால் தான் இந்திய பொருளாதாரம் பாதுகாக்கப்பட்டுள்ளது என பிரதமரே கூறியுள்ளார். ஆனால், விவசாயிகளின் கோரிக்கைகளை ஏற்க மறுக்கிறார். கொரோனாவால் விவசாயிகள் இழந்த இழப்புக்கு பிரதமர் இதுவரை பங்கெடுத்துக்கவில்லை. ஆகையால், விவசாயிகளின் நலன் கருதி, வங்கிகள் கடனையும் தள்ளுபடி செய்யவேண்டும். மேலும், மறு உற்பத்திக்கு விவசாயிகள் ஈடுபடுவதற்கு மத்திய, மாநில அரசுகள் இணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்