பென்சில், ஷார்ப்னர் மீதான ஜிஎஸ்டியை 18% லிருந்து 12% ஆக குறைக்க ஜிஎஸ்டி கவுன்சில் ஒப்புதல்.
டெல்லியில் இன்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தின் 49-வது ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களின் நிதியமைச்சர்கள் கலந்துகொண்டனர். இந்த நிலையில், டெல்லியில் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்துக்கு பிறகு செய்தியாளர் சந்திப்பில் பேசிய மத்திய நிதியமைச்சர், மாநிலங்களுக்குக்கான ஜூன் மாதம் ஜிஎஸ்டி இழப்பீடு தொகையாக ரூ.16,982 கோடியை விடுவிக்க ஜிஎஸ்டி கவுன்சில் ஒப்புதல் அளித்துள்ளது என தெரிவித்தார்.
இதில், தமிழகத்திற்கு ஜூன் மாதம் ஜிஎஸ்டி இழப்பீடு தொகையாக ரூ.1,201 விடுவிக்கப்படுகிறது என்றும் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். மேலும், பென்சில், ஷார்ப்னர் மீதான ஜிஎஸ்டியை 18% லிருந்து 12% ஆக குறைக்க ஜிஎஸ்டி கவுன்சில் ஒப்புதல் அளித்துள்ளது. இதுபோன்று, பாக்கெட்டுகளில் உள்ள சக்கரை பாகு மீதான ஜிஎஸ்டி 18% 5% ஆக குறைக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது. ஜிஎஸ்டி மேல்முறையீட்டு தீர்ப்பாயம் குறித்த அமைச்சர்கள் குழு அறிக்கை சில மாற்றங்களுடன் ஏற்கப்பட்டுள்ளது எனவும் கூறினார்.
மேலும், 5 ஆண்டுகளுக்கு தற்காலிகமாக அனுமதிக்கப்படும் இழப்பீட்டு செஸ் நிலுவைத் தொகையை மத்திய அரசு செலுத்தும். இன்றைய நிலவரப்படி இழப்பீட்டு நிதியில் இந்தத் தொகை உண்மையில் இல்லை என்றாலும், இந்தத் தொகையை எங்களின் சொந்த ஆதாரங்களில் இருந்து விடுவிக்க முடிவு செய்துள்ளோம், அதே தொகை எதிர்கால இழப்பீட்டு செஸ் வசூலில் இருந்து திரும்பப் பெறப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
பெர்த் : ஆஸ்திரேலியாவுடனான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் தடுமாறினாலும் அதன்பிறகு பவுலிங்கில் இந்திய அணி…
சென்னை : தங்கம் விலை இன்று அதிரடியாக சவரனுக்கு ரூ.800 குறைந்துள்ளது. தங்கத்தின் விலை கடந்த வாரம் சவரனுக்கு ரூ.3,000…
சென்னை : தமிழ்நாட்டில் இன்று முதல் 3 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு…
சென்னை : இன்று சர்வதேச அளவில், பெண்களுக்கு எதிரான வன்முறைகள் ஒழிப்பு தினம் கடைபிடிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு, தமிழக வெற்றிக்…
ஜெருசலேம் : இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான போர் பதற்றம் தணிந்து வராத வண்ணம் ஒரு பக்கம் இருந்து வருகிறது.…
டெல்லி : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தற்போது தொடங்கியுள்ளது. இன்று (நவம்பர் 25) தொடங்கிய இந்த கூட்டத்தொடர் வரும் டிசம்பர்…