நடப்பாண்டில் பயிர்க்கடன் ரூ.11,500 கோடி வழங்க இலக்கு..!
ஜூலை 31 வரை 98,036 விவசாயிகளுக்கு ரூ.763 கோடி பயிர்க்கடன் வழங்கப்பட்டுள்ளது என கூட்டுறவுத்துறை கொள்கை விளக்க குறிப்பில் தகவல்.
சட்டப்பேரவையில் கூட்டுறவுத்துறை கொள்கை விளக்க குறிப்பில், 2021-22 ஆம் ஆண்டில் கூட்டுறவு நிறுவனங்கள் மூலமாக பயிர்க்கடன் வழங்க ரூ.11,500 கோடி இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஜூலை 31 வரை 98,036 விவசாயிகளுக்கு ரூ.763 கோடி பயிர்க்கடன் வழங்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டது.
உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை கொள்கை விளக்க குறிப்பில், மக்கள் எளிதில் சென்று வரமுடியாத பகுதிகள் மற்றும் மலைப்பகுதியில் நியாய விலைக்கடைகள் திறக்க சிறப்பு கவனம் செலுத்தப்படுகிறது. கடந்த மே மாதம் 7-ம் தேதியில் இருந்து தற்போது வரை மட்டும் 3,38,512 புதிய மின்னணு குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டுள்ளது. மாநிலத்தில் தனியாக அல்லது குடும்பமாக வசித்து வரும் திருநங்கைகளுக்கு ஜுலை 31 வரை 2950 குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.