சென்னையில் நோ என்ட்ரியில் வாகனம் ஓட்டினால் ரூ.1,100 அபராதம்..! நேற்றும் மட்டும் 1300 பேர் மீது வழக்குப்பதிவு..!
சென்னையில் நோ என்ட்ரியில் வாகனம் ஓட்டினால் ரூ.1,100 அபராதம் விதிக்கப்படும் என போக்குவரத்து காவல்துறை எச்சரிக்கை.
சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்கும், விபத்து ஏற்படுவதை தடுப்பதற்கும் சென்னை மாநகர போக்குவரத்து காவல்துறை தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அதன்படி தற்போது நோ என்ட்ரியில் வாகனம் ஓட்டுவது, சிக்னலை மதிக்காமல் செல்வது போன்ற போக்குவரத்து விதிமுறைகளை மீறுபவர்களுக்கு அபராதம் வசூலிக்கப்பட்டு வருகிறது. தற்போது நோ என்ட்ரியில் செல்லும் நபர்களுக்கு என்று தனியாக நேற்றும் சென்னை மாநகர போக்குவரத்து காவல்துறையினர், சிறப்பு நடவடிக்கை மேற்கொண்டு உள்ளானார்.
அதன்படி நேற்று மட்டும் நோ என்ட்ரியில் பயணித்த 1300 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. பொதுவாக நோ என்ட்ரியில் செல்லும் வாகனங்களுக்கு ரூ.100 அபராதம் விதிக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது, நோ என்ட்ரி பயணத்திற்கு 100 ரூபாயும், ஆபத்து விளைவிக்கும் பயணத்திற்கு ரூ.1000 என மொத்தம் ரூ.1100-ஆக அபராதம் அதிகரிக்கப்பட்டுள்ளது.