ரு.1,00,000 இருந்து 3,00,000 ஆக உயர்வு! கோயில் பணியாளர் குடும்ப நல நிதியை உயர்த்தி தமிழக அரசு அரசாணை
கோயில் பணியாளர் குடும்ப நல நிதியை உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
இது தமிழக அரசு வெளியிட்ட அரசாணையில், இந்து சமய அறநிலையத்துறை கோயில் பணியாளர் குடும்ப நல நிதி ஒரு லட்சத்திலிருந்து ரூ3 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.மேலும் கோயில் பணியாளர்களிடமிருந்து தற்போது வசூலிக்கப்படும் மாதாந்திர சந்தா தொகையை ரூ15லிருந்து, ரூ60 ஆக உயர்த்தி வசூலிக்க வேண்டும் என்று இந்து சமய அறநிலையத்துறை ஆணையருக்கு ஆணை பிறப்பித்துள்ளது தமிழக அரசு.