12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ரூ.10,000 பரிசு..! பட்ஜெட்டில் அசத்தல் அறிவிப்பு..!
12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் ஒரு பாடத்தில் 100 மதிப்பெண் பெறும் மாணவர்களுக்கு ரூ.10,000 வழங்கப்படும்.
சென்னை மாநகராட்சியின் 2023-24-ம் ஆண்டுக்கான வரவு செலவு திட்ட அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. சென்னை மாநகராட்சி மேயர் பிரியா இந்த ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அப்போது, சென்னை மாநகராட்சி பள்ளி மாணவர்களுக்கு பல்வேறு சலுகைகளை அறிவித்தார் மேயர் பிரியா.
அதிலும் குறிப்பாக 2023-24 ஆம் ஆண்டில் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் ஏதேனும் ஒரு பாடத்தில் 100/100 மதிப்பெண் பெறும் மாணவர்களுக்கு ரூ.10,000 வழங்கப்படும் எனவும், இதற்கென ரூ.10 லட்சம் ஒதுக்கப்பட்டு, தனி வழிகாட்டுதல் வெளியிடப்படும் எனவும் அறிவித்துள்ளார்.
மேலும், சென்னை மாநகராட்சி பள்ளிகளில் 10, 12ம் வகுப்புகளில் 100% தேர்ச்சி அளிக்கும் ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் ஊக்கத்தொகை ரூ1500ல் இருந்து ரூ.3,000 ஆக உயர்த்தி வழங்கப்படும் என்றும் சர்வதேச விவகாரங்கள் மற்றும் செய்திகளை மாணவர்களுக்கு வெளிப்படுத்த மாநகராட்சி பள்ளிகளில் மாதிரி ஐக்கிய நாடுகள் சபை நடத்தப்படும் எனவும் அறிவித்துள்ளார்.